சனி, 10 ஆகஸ்ட், 2024

பாஜக ஒருவனை படி என்று சொல்லும்: மற்ற கட்சி போன்று குடி என்று சொல்லாது; அண்ணாமலை

பாஜக ஒருவனை படி என்று சொல்லும்: மற்ற கட்சி போன்று குடி என்று சொல்லாது; அண்ணாமலை

பாஜ., கட்சி ஒருவனை படி என்று சொல்லும். மற்ற கட்சி போன்று குடி என்று சொல்லாது. அதனால்தான் இங்கிலாந்து சென்று படிக்க உள்ளேன் என்று ஈரோட்டில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
ஈரோட்டில் இன்று (10ம் தேதி) தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும். இந்தியா தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பின்தங்கி உள்ளது. இதற்கு ஜிஎஸ்டி குறியீடு வைத்து எந்த மாநிலம் முன்னேற்றம் அடைந்து வருகிறது என்று கணிக்க முடியும். 2024ம் ஆண்டு காலாண்டு பகுதியில் மகாராஷ்டிரா 15% -12%, கர்நாடக 9%, தமிழ்நாடு 3.3% வளர்ந்து உள்ளது.

நமது வளர்ச்சி மற்றும் மாநிலத்தை விட தமிழகம் பின்தங்கி உள்ளது. திமுக அரசு இதனை கவனிக்க வேண்டும். தமிழ்நாடு ஜிஎஸ்டி மாநில வருவாய் மைனஸ் பாயிண்ட் அடிப்படையில் கீழே சென்று உள்ளது. அப்படி என்றால் தமிழகத்தின் பொருளாதாரம் சீர்குலைவு நோக்கி சென்று கொண்டு உள்ளது.

இதனால் தொழில் முனைவோருக்கு போதுமான வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி தரவேண்டும். மத்திய பிரதேச முதல்வர் வந்த போது நான் நிகழ்ச்சிக்கு செல்லவில்லை. கோவையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்ற தொழில் உரிமையாளர்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. தொழில் முனைவோர் எங்கே சலுகை கிடைக்கிறதோ அங்கு செல்வார்கள். அதனால் மத்தியப்பிரதேச முதல்வருடன் நான்கு பேர் ஐஏஎஸ் அதிகாரிகள் வந்தனர்.

ஆனால் இது போன்ற தமிழகத்தில் நடக்கவில்லை. மற்ற மாநிலம் பிரமிப்பு அடையும் வகையில் தமிழகத்தின் நிலை உள்ளது. தமிழகத்தில் இருந்து மற்ற தொழில் முனைவோர் வேறு மாநிலத்திற்கு செல்லாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழில் முனைவோர் முதல்வரை நேரில் பார்க்க முடியாமல் அடையாறு பீச் பீச்சாக அழைய விட்டால் எப்படி.

வங்காளதேசத்தில் உள்ள பிரச்சினை பயன்படுத்தி தொழில் முனைவோர் தமிழகத்தை நோக்கி முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநிலத்தின் பொருளாதார பெருக்கல் நடவடிக்கை முதல்வர் எடுக்கவில்லை. பாஜக 2026ம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகி வருகிறது. நாளை முதல் திருப்பூரில் கூட்டம் தொடங்க உள்ளது.

பாஜக கட்சி ஒருவனை படி என்று சொல்லும்; மற்ற கட்சி போன்று குடி என்று சொல்லாது, அதனால்தான் இங்கிலாந்து சென்று படிக்க உள்ளேன். அத்திக்கடவு அவிநாசி திட்டம் கால தாமதமாகி வருகிறது. எத்தனை முறை காலதாமதம் செய்வது. இன்று அமைச்சர் முத்துசாமி தேதி அறிவிக்கட்டும், தேதி முடிவு செய்யட்டும். தேதி அறிவிக்காத நிலையில் அமைச்சர் முத்துசாமி பேச்சை எப்படி நம்புவது, இந்த மாதம் இறுதிக்குள் திட்டம் நடைமுறைக்கு வரும்.

அமைச்சர் முத்துசாமி திட்டம் தொடங்குவதற்கு முதல்வரிடம் அமைச்சர் தேதி வாங்கிவிட்டாரா, நாங்கள் உண்ணாவிரதப் போராட்டம் கைவிட பரிசீலனை செய்ய தயாராக இருக்கிறோம்.

திமுகவில் 40 ஆண்டுகளுக்கு தலைவர் நிரந்தர பொதுச்செயலாளர் போன்று பாஜகவில் கட்சி தலைவர் இல்லாத போதும் மற்றவர்கள் தலைவர் பணிகளை கவனிப்பார்கள். நாளை திருப்பூர் கூட்டத்தில் நாளை மாநிலத்தின் பொறுப்பாளர்கள் உட்பட 1500க்கும் மேற்பட்டோர் பங்கேற்க உள்ளார்கள். பாஜகவின் தற்போதைய கூட்டணி கூட்டணி ஆட்சியை முன்வைத்த தான் கூட்டணி ஆட்சி அமைத்தோம்.

தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்கு பிறகு பேச்சு எழுந்தது. கூட்டணிக்குள் யார் வந்தாலும் கூட்டணி ஆட்சியில் சந்தேகம் இல்லை. தமிழ்நாட்டின் கூட்டணி ஆட்சி கூட்டணி தர்மமாக பார்க்கப்படுகிறது. திமுக அதிமுக கூட்டணி ஆட்சி என்று சொன்னால் அரசியல் களம் மாறும் 2026ம் ஆண்டு நான்கு போட்டி உள்ளது. எவ்வளவு போட்டி இருக்கிறதோ அப்போது தான் புதியவர்கள் வெற்றி பெற முடியும்.

நல்லவர்களும் 2026ம் ஆண்டு தேர்தலின் போது வரும் 2026ம் ஆண்டு தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்கிறேன். அப்போது தான் மக்களுக்கு யாருக்கு வாக்கு செலுத்த வேண்டும் என்ற வாய்ப்பாக இருக்கும். தமிழக அரசியல் அடியோடு 2026ம் ஆண்டு தேர்தலில் மாறும்.

சந்திரபாபு நாயுடு மாநிலத்தில் தனியாக வெற்றி பெற்றாலும், கூட்டணி கட்சிக்கு அமைச்சர் பதவி கொடுத்து உள்ளார். தமிழிசை சவுந்தரராஜன் அண்ணாமலை, ராதாகிருஷ்ணன் என யாராக இருந்தாலும் 5 வருடத்திற்கு ஒரு முறை வாக்கு சதவிகிதம் உயரவில்லை என்றால் கட்சி எங்காவது தவறு செய்கிறது என்று தான் அர்த்தம். காங்கிரஸ் கட்சி இன்னும் வளரவில்லை.

திமுக அதிமுக கட்சி அண்ணாமலை தவிர மற்ற கட்சிகளை புகழ்ந்து பேசுகிறார்கள். இதனால் என் மூலம் நான் பழைய தலைவர்களுக்கு நல்ல பெயர் பெற்று கொடுத்து உள்ளேன். திமுக அதிமுக கட்சி பாஜக மீதான விமர்சனம் பாஜக வளர்கிறது என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

மொடக்குறிச்சியில் கேந்திராலாயா பள்ளியில் கொண்டு வர நாங்கள் தாயாராக இருக்கிறோம். ஏன் அனுமதி கொடுக்கவில்லை, மத்திய அரசு கொடுப்பதற்கு தாயாராக இருந்தும் தமிழகத்தில் பள்ளி கட்டிடம் சரியில்லாத காரணத்தினால் நவோதயா பள்ளிக்கு ஏன் அனுமதி கொடுக்கவில்லை. அதே நேரத்தில் காமராஜர் பெயரில் தமிழகத்தில் பள்ளி கொண்டு வர தமிழக அரசு அனுமதி கொடுக்குமா, தமிழகத்தில் பழங்குடியினருக்காக மத்திய அரசு 7 பள்ளி நடத்துகிறது.

ஆகஸ்ட் 19ம் தேதி பிறகு உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் விவகாரத்தில் முதல்வர் பழுக்கவில்லை தந்தையே மகனை ட்ரோல் செய்வதை விட உதயநிதிக்கு அவமானம் தேவையில்லை. தந்தை மகனை ட்ரோன் செய்தால் நாங்கள் என்ன செய்வது. வினேஷ் போகத் எடை அதிகரிப்பு காரணத்திற்கு மோடி தான் காரணம் என திமுக போஸ்டர் ஒட்டப்படுகிறது இதை பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. தமிழகத்தில் அரசியல் தரம் தாழ்ந்த நடக்கிறது. அறிவுபூர்வமான அரசியல் நடந்தால் தமிழகம் முன்னேற்றம் அடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அளவில் தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்தப்பட வேண்டும்: கி‌.வீரமணி

இந்திய அளவில் தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்தப்பட வேண்டும்: கி‌.வீரமணி

யூனியன் பேங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்ட வகுப்பு பணியாளர் நல சங்கம் சார்பில் 13வது மாநில மாநாடு ஈரோட்டில் இன்று (10ம் தேதி) நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சங்கத்தின் தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார்.இம்மாநாட்டில் திராவிடர் கழக தலைவா் கி.வீரமணி சிறப்புரையாற்றி பேசியதாவது, தந்தை பெரியார் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.

குழந்தைகளின் முதல் ஆசிரியர் தாய் தான். எனவே பெண்கள் சிந்திக்க கூடியவர்களாகவும், கல்வி கற்று வேலை வாய்ப்புகளில் அமர்வதும் அவசியமாகிறது. சமூக நீதி என்பது இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் முதல் இடத்தில் உள்ளது. இந்தியாவில் சமூக நீதியை நிலைநாட்ட இன்றும் போராட வேண்டிய நிலை தான் இருந்து வருகின்றது.

வேலைவாய்ப்புகளில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இந்தியாவிற்கே தமிழ்நாடு முன் உதாரணமாக விளங்கி வருகின்றது. ஒன்றிய அளவில் இதர பிற்படுத்தப்பட்டோர்களுக்கு மண்டல் கமிஷன் பரிந்துரை அடிப்படையில் 52 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். ஆனால் முதல்கட்டமாக 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றது. இந்த 27 சதவீத இட ஒதுக்கீட்டையும் முழுமையாக இன்னும் பெற பல்வேறு இடையூறுகளை செய்து வருகின்றனர்.

இந்த இட ஒதுக்கீட்டை பெற 14 ஆண்டுகள் தொடர் போராட்டங்கள் நடத்தப்பட்டது. மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்திய முன்னாள் பிரதமர் வி.பி. சிங்கிற்கு நாம் எப்போதும் நன்றி செலுத்த வேண்டும். தற்போது நாட்டில் பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் தனியார் மயமாக்கப்பட்டு வருகின்றது.

அவ்வாறு தனியார் மயமாக்கப்பட்டால் இந்த இட ஒதுக்கீடு பின்பற்றப்பட மாட்டார்கள். இட ஒதுக்கீடுக்காக போராடிய நாம் இனி தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு அமல்படுத்தக்கோரி அகில இந்திய அளவில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். அமெரிக்கா போன்ற நாடுகளில் தனியார் நிறுவனங்களிலும் இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
ஈரோடு மாவட்டத்தில் 14,199 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.84 கோடியில் விலையில்லா சைக்கிள்; அமைச்சர் தகவல்

ஈரோடு மாவட்டத்தில் 14,199 மாணவ, மாணவிகளுக்கு ரூ.6.84 கோடியில் விலையில்லா சைக்கிள்; அமைச்சர் தகவல்

ஈரோடு அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா இன்று (10ம் தேதி) நடைபெற்றது.
இந்த விழாவிற்கு, மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா, மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு 2,124 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.02 கோடி மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

இந்த விழாவில், அமைச்சர் முத்துசாமி தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் மூலம் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 11ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசால் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் நடப்பு கல்வியாண்டில் துவங்கப்பட்டுள்ளது.

இதில் ஈரோடு மாவட்டத்திற்கு 14,199 மிதிவண்டிகள் ரூ.6.84 கோடி மதிப்பீட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில், மாணவிகளின் மிதிவண்டி விலை ரூ.4 ஆயிரத்து 760, மாணவர்கள் மிதிவண்டி விலை ரூ.4 ஆயிரத்து 900 ஆகும்.

அந்த வகையில், முதற்கட்டமாக, வீரப்பன்சத்திரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 276 மாணவியர்களுக்கும், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 146 மாணவர்களுக்கும், ஈரோடு அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 264 மாணவியர்களுக்கும், குமலன்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் 75 மாணவர்கள், 54 மாணவியர்களுக்கும், கருங்கல்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 254 மாணவியர்களுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

அதேபோல், காமராஜ் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் 163 மாணவர்களுக்கும், ரயில்வே காலனி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 100 மாணவர்கள், 27 மாணவியர்களுக்கும், அரசு உதவி பெறும் பள்ளிகளான சி.எஸ்.ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 99 மாணவர்களுக்கும், செங்குந்தர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 220 மாணவர்களுக்கும், கலைமகள் கல்வி நிலையம் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 349 மாணவியர்களுக்கும், சி.எஸ்.ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி 97 மாணவியர்களுக்கும் என 1,321 மாணவியர்களுக்கும், 803 மாணவர்களுக்கும் என மொத்தம் 2,124 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.02 கோடி மதிப்பீட்டில் மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது.

மாணவ, மாணவியர்கள் அனைவரும் பள்ளிக்கு வரும் பயண நேரத்தினையும் குறைத்து பயனுள்ள வகையில் செலவிடுவதற்காக இந்த மிதிவண்டிகள் வழங்கும் திட்டம் அரசின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, மாணவ, மாணவியர்கள் இத்தகைய திட்டங்களை பெற்று பயனடைந்து, பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்க்கின்ற வகையில் சிறப்பாக கல்வி கற்று உயர்ந்த இடத்திற்கு வர வேண்டும் எனத் தெரிவித்தார்.

இவ்விழாவில், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி கந்தசாமி, மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் கஸ்தூரி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தர்மராஜ், மாவட்ட கல்வி அலுவலர்கள் பெல்ராஜ், கபீர், பள்ளி தலைமை ஆசிரியர் சுகந்தி, ஆசிரியர்கள் உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள், மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கான புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்... திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினர்.

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கான புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்... திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களை கட்சியில் இணைத்துக் கொண்டதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து வழங்கினர்.


சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலம் மேற்கு தொகுதியில் தமாகா கட்சிக்கு தீய உறுப்பினர் சேர்க்கை முகாம்... திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் தங்களை தமாகா கட்சியில் இணைத்துக் கொள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து கொடுத்தனர்....

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ஓமலூர் உள்ள அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. தமிழகத்தில் உள்ள சாமானிய மக்களின் தேவைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வரும் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஐயா ஜிகே வாசன் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக நடைபெற்றது.

இந்த புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமிற்கு சேலம் மேற்கு மாவட்ட த.மா.கா கட்சியின் தலைவர் சுசீந்திரகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த புதிய உறுப்பினர் சேர்க்கை முகாமில் திரளான பொதுமக்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு தங்களை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொள்வதற்காக விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து சேலம் மேற்கு மாவட்ட தலைவரிடம் வழங்கினர். 
அவர்களை சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சுசீந்திரகுமார் வாழ்த்தி வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகி ரகு நந்தகுமார் உட்பட மேற்கு தொகுதி நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 64 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா...

சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 64 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா...

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியில்
64-வது பட்டமளிப்புவிழா.681 மாணவ மாணவிகள் பட்டயங்களை பெற்றனர்.
சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 64-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் வெகுசிறப்பாக நடைபெற்றது. சோனா கல்விக் குழுமங்களின் தலைவர் திரு.சொ.வள்ளியப்பா  அவர்கள் விழாவிற்கு தலைமையேற்றார். TPT–யின் முன்னாள் மாணவரும் பெங்களூர், ஹோம்  ஃபேப்ரிக்ஸ் மில் (Home Fabrics Mils) தலைமை நிர்வாக அதிகாரியுமான (President & CEO) திரு.A.S. இராமசுவாமி  அவர்கள், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முதல் ஐந்து இடங்களைப் பெற்ற 60 மாணவ மாணவியர் உட்பட 681 மாணவ, மாணவியர்களுக்கு பட்டையச் சான்றிதழ்கள் (Diploma Certificates) வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
கல்லூரியின் முதல்வர் Dr.V.கார்த்திகேயன் அவர்கள் தமது உரையில், MCDERMOTT Engineering Service Pvt.Ltd என்னும் நிறுவனம் 6 மாணவ, மாணவிகளுக்கு வருடத்திற்கு 8.5 லட்சம் ஊதியம் பெறும் வகையில் பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது என்றும், மேலும் 470-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்களுக்கு, 120-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களில் வருடத்திற்கு ரூ.5.00 லட்சம் வரையிலான ஊதியத்தில் 867-க்கும் மேற்பட்ட வேலைவாய்ப்பு பணி நியமன ஆணைகள், வழங்கப்பட்டுள்ளது எனவும்  தெரிவித்தார். மேலும்,200-க்கும் மேற்பட்ட முன்னணி தொழில் நிறுவனங்களுடன் இணைந்து, மாணவர்களுக்கு தொழில் துறை சார்ந்த பயிற்சிகள் சிறப்பாக பயிற்றுவிக்கப்படுகிறது என்றும்  அவர் கூறினார்.
கல்லூரியின், தலைவர் திரு.சொ.வள்ளியப்பா, அவர்கள் பட்டமளிப்பு விழாவின் தலைமையுரையில், இக்கல்லூரி 67 வருடங்களாக சிறப்பான கல்வியை வழங்கி, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வழிகாட்டியுள்ளது என்று பெருமிதத்துடன் தெரிவித்தார். இக்கல்லூரியில் பயின்ற அனைவரும் தொழிற் கல்வியுடன் ஒழுக்கத்தையும் கற்று நாட்டின் தலைசிறந்த குடிமகன்களாக திகழ வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கல்லூரியின் துணைத்தலைவர்கள் திரு.சொக்கு வள்ளியப்பா மற்றும் திரு.தியாகு வள்ளியப்பா ஆகியோர் விழாவில் சிறப்புரையில். மாணவர்கள் வாழ் நாள் முழுவதும் நவீன தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், புதுமையான திட்டங்களை ஸ்டார்ட்- அப்ஸ் மூலமாக புதிய தொழில் நிறுவனங்களாக செயல்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து வாழ்த்தினர்.
விழாவின் சிறப்பு விருந்தினர், திரு.A.S. இராமசுவாமி  தமது பட்டமளிப்பு  விழா உரையில், தான் பயின்ற இக்கல்லூரி, மாணவர்களுக்கு சிறப்பான தொழில் நுட்பக்கல்வியை வழங்குவதிலும், கட்டமைப்பு வசதிகள், திறன் பயிற்சிகள், காப்புரிமை பெறுதல், ஆராய்ச்சி ஆகியவற்றில் அனைத்து கல்லூரிகளுக்கும் முன்னோடியாக திகழ்கின்றது என்றும்,  இச்சிறப்பான கல்லூரியில் பயிலும் வாய்ப்பு கிடைத்ததற்கு மாணவர்கள் பெருமைபட வேண்டும் என்றும் பாராட்டினார். மேலும், மாணவர்கள் தாங்கள் வளர்த்துக் கொண்ட அறிவையும், திறமைகளையும் தொடந்து புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்றும், தற்போதைய வளர்ந்து வரும் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப புதுமையான கண்டுபிடிப்புகளில் ஆர்வம் காட்ட வேண்டும் என்றும் அறிவுரை கூறி வாழ்த்தினார்.  
இப்பட்டமளிப்பு விழாவில் 681 மாணவ, மாணவியர் தங்கள் பெற்றோருடன் வருகை புரிந்து பட்டையச் சான்றிதழ்களைப் பெற்றனர். சான்றிதழ் பெற்ற மாணவ, மாணவியர், கல்லூரியின் தலைவர், துணைத்தலைவர்கள், முதல்வர், துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தங்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

வெள்ளி, 9 ஆகஸ்ட், 2024

மதுரை கொலை சம்பவம்: சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் 4 பேர் சரண்

மதுரை கொலை சம்பவம்: சத்தியமங்கலம் நீதிமன்றத்தில் குற்றவாளிகள் 4 பேர் சரண்

மதுரை மாவட்டம் அவனியாபுரம் காவல் நிலையப் பகுதியில் டாஸ்மாக் கடையில் மது அருந்தி கொண்டிருந்தபோது ஏற்பட்ட தகராறில், மனோஜ் (வயது 26) என்பவர் கடந்த மாதம் 21ம் தேதி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து, அவனியாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய மதுரை மாவட்டம் வில்லாபுரத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் (வயது 25), ஹரிமணி (வயது 22), அவனியாபுரத்தைச் சேர்ந்த செல்வகுமார் (வயது 26), சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்த கருப்பையா (வயது 21) ஆகிய நான்கு பேர் நேற்று (9ம் தேதி) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதையடுத்து, சத்தியமங்கலம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி உமாதேவி சரணடைந்த 4 வாலிபர்களையும் அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார். அதன்படி, ஆயுதப்படை போலீசார் 4 வாலிபர்களையும் அவனியாபுரம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.
ஈரோட்டில் நாளை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாரத்தான் போட்டி

ஈரோட்டில் நாளை வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் மாரத்தான் போட்டி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் ஈரோடு மாவட்ட இளைஞரணி சார்பில், போதை கலாசாரத்துக்கு எதிரான மாரத்தான் போட்டி ஈரோடு தொட்டம்பட்டியில் நாளை (11ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணிக்கு நடக்கிறது. ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா 10 கி.மீ தொடர் ஓட்டத்தையும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் 5 கி.மீ ஓட்டத்தையும் தொடங்கி வைக்க உள்ளனர்.

அதனைத்தொடர்ந்து பரிசளிப்பு விழா நடக்கிறது. விழாவுக்கு இளைஞரணி மாவட்ட தலைவர் நெல்லை ஆ.ராஜா தலைமை தாங்குகிறார். பேரமைப்பின் இளைஞரணி மாவட்ட செயலாளர் அ.லாரன்ஸ் ரமேஷ் வரவேற்புரை ஆற்றுகிறார். வீட்டுவசதி நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான பரிசுகளை வழங்குகிறார்.

தொடர்ந்து, போதை கலாச்சாரம் என்ற நூலை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் வெளியிடுகிறார். அதனை, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா பெற்றுக் கொள்கிறார். விழாவில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

சிறப்பு அழைப்பாளர்களாக எக்ஸல் கல்வி குழுமத்தின் நிறுவனர் நடேசன், மாநகராட்சி ஆணையாளர் மனிஷ், உணவு பாதுகாப்பு மாவட்ட நியமன அலுவலர் தங்கவிக்னேஷ், மாநகர் மருத்துவ அலுவலர் பிரகாஷ், வணிகர் சங்க பேரமைப்பின் கோவை மண்டலத் தலைவர் சூலூர் சந்திரசேகரன்,மாநில கூடுதல் செயலாளர் ராஜகோபால், மாநில துணைத் தலைவர் திருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள்.

விழா ஒருங்கிணைப்பு ஏற்பாடுகளை மாவட்டத் தலைவர் இரா.க.சண்முகவேல், செயலாளர் பொ.இராமச்சந்திரன், பொருளாளர் உதயம் பொ.செல்வம், மாநகரத் தலைவர் அந்தோணி யூஜின், செயலாளர் பாலமுருகன் ஆகியோர் செய்து வருகின்றனர். விழாவின், மாவட்ட இளைஞரணி பொருளாளர் சி.சேகர் நன்றி கூறுகிறார்.