செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

சேலத்தில் இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் SRMU மற்றும் AIRF தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு பொருட்கள் மற்றும் வருடாந்திர ஊக்கத்தொகை... 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பயன்....

சேலத்தில் இந்திய ரயில்வே துறையில் பணியாற்றும் SRMU மற்றும் AIRF தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு ஊக்கப்படுத்தும் விதமாக பரிசு பொருட்கள் மற்றும் வருடாந்திர ஊக்கத்தொகை... 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் பயன்....

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

SRMU தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் வருடாந்திர ஊக்கத்தொகை வழங்கும் விழா.. 5,000கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பயன் பெற்றனர்.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் மிகப்பெரிய நிறுவனமான இந்திய ரயில்வே துறையில் ஏராளமான தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் சதன் ரயில்வே மஸ்தூர் யூனியன் என்ற SRMU தொழிற்சங்கமும் ஒன்று. SRMU தொழிற்சங்கத்தின் அகில இந்திய பொதுச் செயலாளர் கண்ணையா தலைமையின் கீழ் SRMU மற்றும் AIRF என்ற இரண்டு தொழிற்சங்கங்கள் செயல்பட்டு வருகின்றனர். 
இந்த நிலையில் எஸ் ஆர் எம் யூ தொழிற்சங்க அகில இந்திய பொதுச் செயலாளர் கண்ணையா அறிவுறுத்தலின் பேரில் இந்த இரண்டு தொழிற்சங்கங்களில் உள்ள உறுப்பினர்களுக்கு ஆண்டுதோறும் அவர்களை ஊக்குவிக்கும் விதமாக பரிசு பொருட்களும் வருடாந்திர ஊக்கத் தொகையும் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக நடப்பாண்டிற்கான பரிசுப் பொருட்கள் மற்றும் வெகுமதி வழங்கும் நிகழ்ச்சி சேலம் ரயில்வே கோட்ட அலுவலகம் எதிரே உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சதர்ன் ரயில்வே மஸ்தூர் யூனியன் தொழிற்சங்கத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஈஸ்வர்லால் மற்றும் உதவி பொதுச் செயலாளர் கோவிந்தன் முன்னிலை வகித்த நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம்.யு மற்றும் ஏ.ஐ.ஆர்.எப் தொழில் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்ட இந்த நிகழ்ச்சியில், தொழிற்சங்கங்களின் செயல்பாடுகள் குறித்தும் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. தொடர்ந்து தங்களது ரயில்வே துறையில் தீர்க்கப்படாமல் உள்ள நீண்ட நாள் கோரிக்கைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியில், அகில இந்திய ரயில்வே துறையை தனியார் மையமாகும் மத்திய அரசின் முடிவை தகர்த்தெறிந்து விடவும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து உறுதி செய்யப்பட்ட பென்ஷன் திட்டத்தை பெற தொடர்ந்து போராடுவது என்றும் இந்த நிகழ்ச்சியில் முடிவு செய்யப்பட்டது.
இதனை அடுத்து, தொழிற்சங்கங்களின்உறுப்பினர்களுக்கு அவர்களது சிறந்த பங்களிப்பை பாராட்டும் விதமாக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களுக்கு பரிசு பொருட்களும் வருடாந்திர ஊக்கத்தக்கையும் வழங்கி கௌரவிக்கப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
விடியல் லைஃப் டிரஸ்ட் அமைப்பின் சார்பில் போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு நிகழ்ச்சி. திரளான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்பு.

விடியல் லைஃப் டிரஸ்ட் அமைப்பின் சார்பில் போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு நிகழ்ச்சி. திரளான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்பு.

சேலம். 
S.K. சுரேஷ்பாபு. 

சேலத்தை எடுத்துள்ள தளவாய்பட்டியில் போதை இல்லா தமிழகம் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் உறுதிமொழி....

ஸ்ரீ சாரதா மகளிர் கல்லூரி மற்றும் விடியல் லைஃப் டிரஸ்ட் ஆகியவை இணைந்து நடத்திய போதையில்லா தமிழகம் என்ற தலைப்பில் நாட்டு நலப்பணி திட்ட முகாம் சேலத்தை எடுத்துள்ள தளவாய்பட்டி ஊராட்சி ஒன்றிய சமுதாய கூடத்தில் நடைபெற்றது. 

விடியல் லைஃப் டிரஸ்ட் நிறுவனர் கோகுல் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஸ்ரீ சாரதா கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட நிகழ்ச்சி அதிகாரிகள் மருத்துவர் ரெனி ஜான்சன், மருத்துவர் சுபா, மருத்துவர் பானுமதி மற்றும் மருத்துவர் சங்கீதா உள்ளிட்டு ஒரு கலந்து கொண்டு முகமினை சிறப்பித்தனர். 
தொடர்ந்து நடைபெற்ற முகாமில் போதை இல்லாத தமிழகத்தை உருவாக்குவோம் என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகள் உட்பட சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர். 
இதனை அடுத்து மது போதையால் உடலுக்கு ஏற்படும் நன்மை தீமைகள் குறித்தும் ஒருவர் மது அருந்துவதனால் அவர்களது குடும்பம் படும் இன்ப துன்பங்கள் குறித்தும் விரிவாக விளக்கி கூறப்பட்டது. 
இந்த நிகழ்ச்சியில் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கல்லூரி மாணவிகள் என திரளானோர் பங்கேற்றனர்.
சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் பிறந்தநாள் விழா. ஆதரவற்றவர்கள் 100 பேருக்கு அன்னதானம். இளைஞர் சங்கத்தினர் சார்பில் ஏற்பாடு.

சட்டமன்ற உறுப்பினர் இரா அருள் பிறந்தநாள் விழா. ஆதரவற்றவர்கள் 100 பேருக்கு அன்னதானம். இளைஞர் சங்கத்தினர் சார்பில் ஏற்பாடு.

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள், அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு பாட்டாளி இளைஞர் சங்க சார்பில், காலை சுகவனேஸ்வரர் கோவிலில் சிறப்பு  பூஜை செய்து காலை 100 பேருக்கு காலை உணவு வழங்கி, பிறகு அழகாபுரம் மிட்டா  புதூர் அருகே உள்ள அன்னை தெரசா இல்லத்தில் 100 பேருக்கு காலை உணவு மற்றும் குரங்கு சாவடி சாஸ்தா நகர் ஐயப்பன் கோவிலில் நெய்யபிஷேக பூஜையும் மற்றும் பல்வேறு இடங்களில் மரக்கன்றுகள் நட்டும் மாணவ மாணவிகளுக்கு  இலவச நோட்டு புத்தகங்கள் வழங்கியும், இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர் இந்நிகழ்ச்சி இளைஞர் சங்க செயலாளர் விஜயகுமார், தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்டத் துணைச் செயலாளர் சுமன், அழகாபுரம் பகுதி செயலாளர். ஏ.கே  நடராஜன், பகுதி தலைவர் கணேசன், மாவட்ட அன்புமணி தம்பிகள் படை செயலாளர், இளவரசன், இளைஞரணி மாவட்ட துணை செயலாளர்  அருண், ஏ.கே நிர்மல், அஸ்தம்பட்டி செழியன், மற்றும் கோபால் ஜி, குணா பிரபா ஆகியோர் உடன் இருந்தனர்.

திங்கள், 12 ஆகஸ்ட், 2024

ஈரோட்டில் பெண் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த வாலிபர்கள் கைது: 149.50 பவுன் நகைகள் மீட்பு

ஈரோட்டில் பெண் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த வாலிபர்கள் கைது: 149.50 பவுன் நகைகள் மீட்பு

ஈரோட்டில் பெண் டாக்டர் வீட்டில் கொள்ளையடித்த இரண்டு வாலிபர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் இருந்து 149.50 பவுன் நகை மீட்டனர்.
ஈரோடு சம்பத்நகர் அருகே உள்ள சஞ்சய் நகர் ராணி வீதியை சேர்ந்த பிரபாத் மனைவி ராணி சுப்ரியா (வயது 42). ஹோமியோபதி டாக்டர். இவரது தந்தை பழனிச்சாமி. பல் டாக்டர். இவர்கள் வீட்டிற்குள் கடந்த மாதம் 30ம் தேதி இரவு புகுந்த ஆசாமிகள் 219 பவுன் நகைகள் மற்றும் 55 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து வீரப்பன்சத்திரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர். மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் உத்தரவின் பேரில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. இதில், சென்னையைச் சேர்ந்த பழங்குற்றவாளிகள் இக்கொள்ளையில் ஈடுபட்டதை காவல்துறையினர் கண்டறிந்தனர்.

இந்தநிலையில், கரூர் பேருந்து நிலையம் பகுதியில் கொள்ளையர்கள் நடமாட்டம் இருப்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கண்காணித்தனர். அப்போது, சந்தேகப்படும்படி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 பேரை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள், சென்னை ஆவடி சுரக்கபாளையம் நந்தனம் மேட்டூர் குமரன்வீதியை சேர்ந்த சிவாவின் மகன் அகில்குமார் என்கிற வெள்ளை (வயது 22), அம்பத்தூர் தெற்குவீதியை சேர்ந்த சிவலிங்கத்தின் மகன் சஞ்சய் என்கிற தனசேகர் (வயது 19) ஆகியோர் என்பதும், இவர்கள் 2 பேரும் ராணிசுப்ரியாவின் வீட்டில் நகையை கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, அகில்குமார், சஞ்சய் ஆகிய 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து 149.50 பவுன் நகை மீட்டனர். கொள்ளை சம்பவத்துக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கொள்ளை வழக்கில் தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.

கைதான அகில்குமார் மீது சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் 20 குற்ற வழக்குகளும், சஞ்சய் மீது 15 குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். மேலும், கொள்ளை நடந்த 12 நாளில் குற்றவாளிகளை போலீசார் கைது செய்து நகைகளை மீட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வயநாடு மக்களுக்காக உண்டியலில் திரட்டிய ரூ.10 ஆயிரத்தை ஈரோடு ஆட்சியரிடம் வழங்கிய மாணவன்

வயநாடு மக்களுக்காக உண்டியலில் திரட்டிய ரூ.10 ஆயிரத்தை ஈரோடு ஆட்சியரிடம் வழங்கிய மாணவன்

கேரளா மாநிலம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் இதுவரை 420-க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். பலர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர், சினிமா பிரபலங்கள், தொழிலதிபர்கள் என பல தரப்பு மக்கள் தங்களால் முடிந்த பணத்தை அனுப்பி வருகின்றனர்.
அந்த வகையில், ஈரோடு மாவட்டம் வடுகப்பட்டி பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் லித்துரன் கேரளா வயநாடு ஏற்பட்ட நிலச்சரிவுக்கு அனுதாபம் அனுதாபம் தெரிவித்து அப்பகுதி மக்களுக்கு உதவும் வகையில் தாண்டாம்பாளையம் சுற்றுவட்டார பகுதியில் தனது தாத்தா மணிவண்ணனுடன் உண்டியல் ஏந்தி பொதுமக்களிடம் நிதி திரட்டினார்.

உண்டியல் மூலம் சுமார் ரூ. 10,200 பணம் திரண்டது. அந்த பணத்துடன் இன்று (12ம் தேதி) ஈரோடு ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மாணவன் லித்துரன் அதனைக் காசோலையாக மாற்றி ஆட்சியர் ராஜ கோபால் சுன்கராவிடம் வழங்கினார். அந்த மாணவனை ஆட்சியர் உள்பட அதிகாரிகள் பாராட்டினார். இதே, மாணவர் சுனாமி பேரழிவுக்காக பொதுமக்களிடம் நிதி திரட்டி முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு பணம் அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
போதை பொருள் ஒழிப்பு: ஈரோடு ஆட்சியர் தலைமையில் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி

போதை பொருள் ஒழிப்பு: ஈரோடு ஆட்சியர் தலைமையில் பள்ளி மாணவர்கள் உறுதிமொழி

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம், காமராஜ் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி இன்று (12ம் தேதி) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்ததாவது, ஈரோடு மாவட்டத்தில் அனைத்து மேல்நிலைப்பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொது இடங்களில் போதைப்பொருட்கள் ஒழிப்பு தொடர்பான உறுதிமொழி ஏற்பு இன்று (12ம் தேதி) நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவ, மாணவியர்கள் வாழ்க்கையின் முக்கியமான கட்டத்தில் உள்ளீர்கள். இன்று எடுத்த உறுதிமொழியினை வாழ்க்கை முழுவதும் கடைபிடிக்க வேண்டும். கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருட்கள் பறிமுதல் தொடர்பாக, வாரம் ஒருமுறை கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

மாணவ, மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் போதை பொருட்கள் தொடர்பாக ஏதேனும் தகவல் கிடைக்கும் பட்சத்தில் உடனடியாக அருகில் உள்ள காவல் நிலையத்தில் தெரிவிக்க வேண்டும். போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பாக அரசின் மூலம் பல்வேறு விழிப்புணர்வுகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், நீங்களும் அதற்கு தங்களது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

மாணவ, மாணவியர்கள் எவ்வித தவறான பழக்கத்திற்கும் ஆளாகாமல் வாழ்வில் முன்னேற வேண்டும். தமிழ்நாடு முழுவதும் போதைப் பொருள் எதிர்ப்பு தொடர்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியில் 2022ம் ஆண்டு 30 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களும், கடந்த ஆண்டு 70 லட்சத்திற்கு மேற்பட்ட மாணவர்களும் பங்கேற்றனர்.

எனவே, உங்கள் வாழ்க்கை உங்கள் கையில் உள்ளது. நம் வாழ்க்கை முக்கியம், நமது பெற்றோர்கள் முக்கியம் என நீங்கள் அனைவரும் நினைத்து கல்வி கற்பதில் கவனம் செலுத்தி வாழ்க்கையில், முன்னேற வேண்டும் எனத் தெரிவித்தார். 

தொடர்ந்து, போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதி மொழியான, போதைப் பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை நான் முழுமையாக அறிவேன். நான் போதைப்பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும், போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்.

போதைப் பழக்கத்திற்கு உள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன். போதைப் பொருட்களின் உற்பத்தி, நுகர்வு, பயன்பாடு ஆகியவற்றிற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளின் மூலம் போதைப் பொருட்களை தமிழ்நாட்டில் வேரறுக்க அரசுக்கு துணை நிற்பேன்.

மாநிலத்தின் வளர்ச்சிக்கும், மக்களின் நல்வாழ்விற்கும் நான் அர்ப்பணிப்புடன் பங்காற்றுவேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என்று மாவட்ட ஆட்சியர் வாசிக்க, பின்தொடர்ந்து மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உறுதி மொழியினை ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வே.செல்வராஜ், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, ஈரோடு மாநகராட்சி துணை ஆணையர் சரவணகுமார், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, கோட்ட கலால் அலுவலர் வீரலட்சுமி, மாநகர நல அலுவலர் பிரகாஷ், மாநகராட்சி பொறியாளர் விஜயகுமார், ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் பெல்ராஜ் மற்றும் மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஈரோடு வேலைவாய்ப்பு மையத்தில் 16ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு வேலைவாய்ப்பு மையத்தில் 16ம் தேதி தனியார் வேலைவாய்ப்பு முகாம்

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா இன்று (12ம் தேதி) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:-

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது.

இவ்வேலைவாய்ப்பு முகாமில் பல்வேறு தனியார்துறை வேலை அளிப்பவர்கள் கலந்து கொண்டு தங்களுக்குத் தேவையான எழுதப்படிக்க தெரிந்த நபர்கள் முதல் பட்டப்படிப்பு படித்த நபர்கள் வரை மற்றும் செவிலியர்கள், டெய்லர்கள், கணினி இயக்குபவர்கள், தட்டச்சர்கள், ஓட்டுநர்கள் போன்ற பணிகளுக்கு தகுதியுள்ள நபர்களை தேர்வு செய்து தனியார் துறையில் பணியமர்த்தம் செய்யப்பட்டு வருகின்றனர்.

இதன் மூலம் மாதந்தோறும் 100க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர். மேலும், திறன் பயிற்சி அளிக்கும் நிறுவனங்களும் கலந்துகொண்டு திறன் பயிற்சிக்கு தேவையான நபர்களை தேர்வு செய்து பயிற்சி அளித்து வருகின்றனர். அதன்படி இம்மாதம் 16ம் தேதியன்று (வெள்ளிக்கிழமை) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது. எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம். இம்முகாமின் வாயிலாக தேர்ந்தெடுக்கப்பட்டு தனியார் துறையில் பணியமர்த்தம் பதிவு எண் செய்யப்படும் வேலைநாடுநர்களின் வேலைவாய்ப்பு அலுவலக இரத்து செய்யப்பட மாட்டாது.

மேலும், விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 86754 12356, 94990 55942 என்ற கைப்பேசி எண் வாயிலாகவும், erodemegajobfair@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.