சனி, 17 ஆகஸ்ட், 2024

எழுச்சி தமிழரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம். சேலம் தெற்கு தொகுதி சார்பில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முட்டையுடன் கூடிய மதிய பிரியாணி விநியோகம் செய்து சேலம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் அசத்தல் ..

எழுச்சி தமிழரின் பிறந்தநாள் விழா கொண்டாட்டம். சேலம் தெற்கு தொகுதி சார்பில் மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு முட்டையுடன் கூடிய மதிய பிரியாணி விநியோகம் செய்து சேலம் தொகுதி விடுதலை சிறுத்தைகள் அசத்தல் ..

சேலம்.
S.K. சுரேஷ் பபு

எழுச்சித் தமிழரின் 62 ஆவது பிறந்தநாள் விழா. சேலம் தெற்கு தொகுதி விசிக சார்பில் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு முட்டையுடன் கூடிய சிக்கன் பிரியாணி..

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் MP அவர்களின் பிறந்தநாள் விழா தமிழர்களின் எழுச்சி நாளாக அந்த கட்சியினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சேலம் தெற்கு மாவட்ட விசிக சார்பில் எழுச்சித் தமிழரின் பிறந்தநாள் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது. காலை முதல் தெற்கு தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் கட்சி கொடிகளை ஏற்று வைக்கும் பொது மக்களுக்கு இனிப்புகளும் வழங்கி கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் உள்ள CSI பாலர் ஞான எழுத்தில் உள்ள மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு முட்டையிடும் கூடிய சிக்கன் பிரியாணி வாங்கி எழுச்சித்தமிழரின் பிறந்தநாள் விழாவை சேலம் தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி மகிழ்தனர். 

விசிக சேலம் தெற்கு மாவட்ட செயலாளர் மொழிஅரசு தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில், தெற்கு தொகுதி பொறுப்பாளர்கள் கணபதி பெரியசாமி பிரேம் வளவன் அஜித் கௌதம் லோகு குமார் சம்பத் ராஜு தர்மன் உட்பட தோழமை கட்சியான ஆதித்தமிழர் பேரவையின் இளைஞர் அணி மாநில செயலாளர் ஏ.டி.ஆர்.சந்திரன் உள்ளிட்ட ஒரு கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

வெள்ளி, 16 ஆகஸ்ட், 2024

எழுச்சித் தமிழரின் 62 ஆவது பிறந்தநாள் விழா. விசிக தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்.

எழுச்சித் தமிழரின் 62 ஆவது பிறந்தநாள் விழா. விசிக தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம்.

சேலம். 

விசிக தலைவர் தொல் திருமாவளவன் 62 ஆவது பிறந்தநாள் விழா. விசிக தொழிலாளர் விடுதலை முன்னணி சார்பில் ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட்டம். 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழா தமிழர்களின் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக உடையாபட்டி பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணல் புரட்சியாளர் அம்பேத்கர் திருவருவு சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநிலத் துணைச் செயலாளர் சரசுராம் ரவி, ஏற்காடு தொகுதி செயலாளர் பாவலர் மற்றும் தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர்கள் சுந்தரம், திருமா குமார், கஜேந்திரன் ராஜசேகரன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் ஏழை எளியவர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் இலவச வேட்டி சேலைகளை வழங்கியும் பிறந்த நாளை கொண்டாடினர். 
இந்த நிகழ்ச்சியில் கட்சியின் நிர்வாகிகள் கேரளா ஆனூர் கலந்து கொண்டனர். இதேபோல சேலம் வடக்கு மாவட்டம் தொல் திருமாவளவன் அவர்களின் பிறந்த நாள் விழாவின் போது மேளதாளங்கள் மூலம் பட்டாசுகள் வெடித்தும் உற்சாகமாக கொண்டாடப்பட்ட இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடி ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி ஏழை எளியவர்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி கொண்டாடப்பட்ட இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மந்திரி பாலு கோவிந்த் கோபிநாத் நவீன் குமார் கார்த்தி மற்றும் கரிகாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்த முதல்வர்

அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: காணொலிக் காட்சி மூலம் தொடங்கி வைத்த முதல்வர்

நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டங்களின் முன்னோடி திட்டமாகவும், ஈரோடு, திருப்பூர் கோவை உள்ளிட்ட 3 மாவட்டங்களின் 65 ஆண்டு கால கனவு திட்டமாகவும் கருதப்படும் அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தின் தொடக்க விழா பவானி காலிங்கராயன் அணைக்கட்டு முதலாவது நீரேற்று நிலையத்தில் இன்று (17ம் தேதி) காலை 10 மணிக்கு நடைபெற்றது.
ரூ.1916.41 கோடி மதிப்பீட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள இந்த திட்டத்தை, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்ததன் மூலம் 3 மாவட்டங்களில் உள்ள வறட்சியான பகுதிகளில் உள்ள 31 ஏரிகள், 1,045 குளங்கள் மற்றும் குட்டைகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு வந்து நிரப்பப்படும்.

இதனால், விவசாய கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து குடிநீர் பிரச்சனைக்கும் தீர்வு காணப்படுவதோடு 3 மாவட்டங்களில் உள்ள 24 ஆயிரத்து 468 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். நிலத்தடி நீர்மட்டமும் உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

முதலாவது நீரேற்று நிலையத்தில் நடைபெற்ற தொடக்க விழாவில், வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் சு. முத்துசாமி, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன், மாவட்ட ஆட்சியர்கள் ராஜ கோபால் சுன்கரா (ஈரோடு), கிராந்தி குமார் பாடி (கோவை), கிறிஸ்துராஜ் (திருப்பூர்), ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் கே.இ.பிரகாஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ. ஜி வெங்கடாசலம் (அந்தியூர்), ஈஸ்வரன் (திருச்செங்கோடு), சி.கே.சரஸ்வதி (மொடக்குறிச்சி), ஈரோடு மேயர் நாகரத்தினம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுதந்திர தின விழாவில் களை கட்டிய சேலம் மத்திய சிறை. ஜெயில் சிங்கர் போட்டி நடத்தி சிறை துறை அசத்தல்...

சுதந்திர தின விழாவில் களை கட்டிய சேலம் மத்திய சிறை. ஜெயில் சிங்கர் போட்டி நடத்தி சிறை துறை அசத்தல்...

சேலம்.
S.K. சுரேஷ்பாபு.

ஜெயில் சிங்கர் போட்டி நடத்தி பரிசு பாராட்டு வழங்கி உற்சாகப்படுத்திய சுதந்திர தின விழா. வனவாசம் சிறைவாசம் என்றாலே நினைத்துக் கூட மாற்ற முடியாத அனுபவங்களையும் பல பாடங்களையும் கற்றுத்தரும் இடமாக இருந்து வந்தது

ஏதோ ஆத்திரத்தில் அவசரத்தில் கோபத்தில் செய்த தவறுகளுக்காக வாழ்நாள் முழுவதும் தங்கள் ஆயுள் நாட்களை கழிக்கும் சிறைவாசிகளுக்கு தமிழக அரசு அவர்களை மேம்படுத்த பல்வேறு வகையான புத்துணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தொலைநோக்கு திட்டத்தில் கணினி பயிற்சி தொலைதூரக் கல்வி இயக்கம் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி அழகு கலை பயிற்சி என சிறைக்கு வெளியே கிடைக்கும்.  அத்தனை வசதி வாய்ப்புகளும் தற்போது சிறைகுள்ளும்  வந்துவிட்டது.
இதெல்லாம் ஒருபுறம் இருந்தாலும் அவர்களின் தனித்திறமை கலைத்திறன்களை வெளிக்கொண்டுவரும் வகையில் சேலம் மத்திய சிறைச்சாலை நிர்வாகம் புதியயுக்திகளை கையாண்டு அவர்களை மகிழ்ச்சி படுத்தி வருகிறது.
சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஜெயில் சிங்கர் என்ற நிகழ்ச்சியை நடத்தி ஜெயில்சிங்கர் 2024 என்ற பட்டத்தையும் வழங்கி கௌரவித்துள்ளது. சிறை நிர்வாகம்  சேலம் மத்திய சிறையில்சுதந்திர தின விழாவை யொட்டி பேச்சு போட்டி கட்டுரை போட்டி மற்றும் பாட்டு போட்டி நடைபெற்றன ஜெயில் சிங்கர் என்ற தலைப்பில் நடைபெற்ற பாட்டு போட்டியில் நூற்றுக்கு மேற்பட்ட சிறைவாகளுக்கு ஏற்கனவே ஆடிசன் நடத்தப்பட்டு  பாடகர்கள் இறுதி தேர்வுக்கு அனுப்பப்பட்டனர். இவர்கள் நேற்று நடைபெற்ற ஜெயில் சிங்கர் போட்டியில் தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தினார். 
இதற்காக சிறைவாசிகளுக்குள்ளே நடுவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களே மற்ற சிறைவாசிகளுக்கு மதிப்பெண்களை வழங்கினார் இறுதியில் நல்ல முறையில் பாடி அனைவரையும் பாராட்டைப் பெற்று நல்ல மதிப்பெண்களைப் பெற்ற சிறைவாசி ஜெய்சங்கர் என்பவர் 2024 ஜெயில்சிங்கர் என்ற பட்டத்தினை தட்டிச் சென்றார்.
சேலம் மத்திய சிறையில் கண்காணிப்பாளர் பொறுப்பு வினோத் கலந்து கொண்டு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கி கௌரவித்தார் 200க்கும் மேற்பட்ட சிறைவாசிகள் முன்னிலையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில் சிறைவாசிகள் தயக்கமின்றி  தங்களின் தனித் திறமையை வெளிப்படுத்தியது மற்ற சிறைவாசிகளுக்கு தன்னம்பிக்கை வளர்ப்பதாகவே அமைந்த உள்ளது. 
சிறைவாசம் என்றால் கொடுமை துன்பம் கஷ்டம் தண்டனை என அனுபவித்து வந்த காலத்தை சிறைவாசத்தை இசை வாசகமாகவே மாற்றும் சிறை அதிகாரிகளின் இந்த நடவடிக்கை சிறைவாசிகளுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
மேலும் சிறைவாசத்தில் சமுதாய சீர்திருத்த கருத்துக்களை புகுத்தி அவர்களை நல்வழிப்படுத்தி வெளியில் வரும்போது நல்ல மனிதர்களாக வாழ வழி வகுக்க நடவடிக்கை எடுத்து வரும் சிறை அதிகாரிகளின் உன்னத பணி பாராட்டத்தக்க வகையில் உள்ளது  என்றால் அது மிகையல்ல. இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.

வியாழன், 15 ஆகஸ்ட், 2024

அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: நாளை காணொலி வாயிலாக முதல்வர் துவக்கி வைப்பு

அத்திக்கடவு-அவிநாசி திட்டம்: நாளை காணொலி வாயிலாக முதல்வர் துவக்கி வைப்பு

தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் பவானி ஆறு, கேரள மாநிலத்தில் பயணித்து மீண்டும் தமிழ்நாட்டில் அத்திக்கடவு என்ற இடத்தில் கோவை மாவட்டம் பில்லூர் அணை வழியாக ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வந்தடைகிறது.
பின்னர், அங்கிருந்து 75 கி.மீ. தூரம் பயணித்து காவிரி ஆற்றில் கலக்கிறது. மொத்தம் 225 கி.மீ. தூரம் பயணிக்கும் பவானி ஆற்றில் ஆங்காங்கே வனப்பகுதியில் இருந்து வரும் சிற்றாறுகளும் கலக்கின்றன. இதனால் மழைக்காலங்களில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது, ஆற்றில் வீணாகும் தண்ணீரை வறட்சி பகுதிகளுக்கு கொண்டு செல்லும் வகையில் அத்திக்கடவு-அவிநாசி திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் ஈரோடு, கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் வறட்சி பகுதிகளான அவிநாசி, அன்னூர், காரமடை, திருப்பூர் சேவூர், குன்னத்தூர், பெருந்துறை, காங்கயம், ஊத்துக்குளி, நம்பியூர், புளியம்பட்டி பகுதிகளில் உள்ள குளம், குட்டை, ஏரிகளுக்கு குழாய் மூலம் தண்ணீரை கொண்டு சென்று நிரப்பி நிலத்தடி நீர் செறிவூட்டுதல் என்பது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

ஈரோடு, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்ட மக்களின் கனவு திட்டமாகவும், விவசாயிகளின் நீண்ட கால கோரிக்கையாக அத்திக்கடவு-அவிநாசி திட்டம் இருந்து வந்த இத்திட்டத்துக்கு கடந்த 2019ம் ஆண்டு அப்போதைய முதல்வர் பழனிசாமி, திட்டத்துக்கு தேவையான ரூ.1,652 கோடி ரூபாயை ஒதுக்கினார். அவிநாசியில் 2019ம் ஆண்டு பிப்ரவரி 28ம் தேதி அடிக்கல் நாட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடந்தது.

தொடர்ந்து, நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக பணிகள் நடந்து வந்தன. இத்திட்டத்துக்கு, மூன்று மாவட்டங்களிலும், 1,045 குளம், குட்டைகள் தேர்வு செய்யப்பட்டு, நீர் செறிவூட்டப்பட உள்ளது. இதற்காக 1,046 கி.மீ நீளத்துக்கு குழாய் பொருத்தப்பட்டுள்ளது. ஆறு இடங்களில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அத்திக்கடவு-அவிநாசி திட்டத்தை நாளை (17ம் தேதி) காலை 10 மணிக்கு காணொலி காட்சி மூலம் தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்னிலை வகிக்கிறார். திட்டத்துக்கு ரூ.1,916.41 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இத்திட்ட தொடக்க விழா பவானி காலிங்கராயன் அணைக்கட்டு முதலாவது நீரேற்று நிலையத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நீர்வளத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
ஈரோடு மாவட்டத்தில் நாளை (17ம் தேதி) பல்வேறு பகுதிகளில் மின்தடை

ஈரோடு மாவட்டத்தில் நாளை (17ம் தேதி) பல்வேறு பகுதிகளில் மின்தடை

ஈரோடு மாவட்டத்தில் நாளை (17ம் தேதி) சனிக்கிழமை ஈரோடு, அந்தியூர் மற்றும் கஸ்பாபேட்டை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால், கீழ்க்கண்ட இந்தப் பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- ஈரோடு நகர் முழுவதும், வீரப்பன்சத்திரம், இடையன்காட்டுவலசு, முனிசிபல்காலனி, வெட்டுக்காட்டுவலசு, வக்கில்தோட்டம், ஆசிரியர் காலனி, பெருந்துறை சாலை, சம்பத்நகர், மாணிக்கம்பாளையம், பாண்டியன்நகர், சக்திநகர், பெரியவலக, பாப்பாத்திகாடு, பாரதிதாசன் வீதி. முனியப்பன்கோவில் வீதி, நாராயணவலக, டவர்லைன்காலனி, திருமால்நகர், கருங்கல்பாளையம், கே.என்.கே.சாலை, மூலப்பட்டறை, சத்தி சாலை மற்றும் நேதாஜி சாலை.

அந்தியூர் துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- அந்தியூர், தவிட்டுபாளையம், மைக்கேல்பாளையம், நகலூர், முனியப்பன்பாளையம், கொண்டையம்பாளையம், தோப்பூர், வெள்ளையம்பாளையம், பிரம்மதேசம், தோட்டகுடியம்பாளையம், காட்டூர், செம்புளிச்சாம்பாளையம், பருவாச்சி, பச்சாம்பாளையம், பெருமாபாளையம், புதுப்பாளையம், சங்கராபாளையம், எண்ணமங்கலம், கோவிலூர், வெள்ளித்திருப்பூர், கெட்டிசமுத்திரம் மற்றும் பர்கூர் மலைப்பகுதி.

கஸ்பாபேட்டை துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்:- கஸ்பாபேட்டை, முள்ளம்பரப்பு, சின்னியம்பாளையம், வேலங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, ஈபிநகர், என்ஜிஜிஓ நகர், கேஏ எஸ் நகர், இந்தியன் நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், திருப்பதி கார்டன், முத்துகவுண்டன்பாளையம், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம் புதூர், கிளியம்பட்டி, ரகுபதிநாயக்கன்பாளையம் மற்றும் காகத்தான்வலசு ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.