செவ்வாய், 8 அக்டோபர், 2024

ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.9) பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை (அக்.9) பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் காசிபாளையம், சிவகிரி, நடுப்பாளையம், கணபதிபாளையம் மற்றும் திங்களூர் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (அக்டோபர் 9) புதன்கிழமை பராமரிப்பு பணிகள் நடக்கிறது. இதனால், நாளை (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு காசிபாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- ஈவிஎன் சாலை, சென்னிமலை சாலை, கரிமேடு மற்றும் மணல்மேடு பகுதி.

கொடுமுடி அருகே உள்ள சிவகிரி துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம் கோட்டை, விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஓலப்பாளையம், ஆயப்பரப்பு, விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன் கோவில், தொப்பபாளையம், பெரும்பரப்பு, நம்மகவுண்டம்பாளையம், வாழைத்தோட்டம், அஞ்சூர், சிலுவம்பாளையம், கருக்கம்பாளையம், குருக்குவலசு, வள்ளியம்பாளையம், முத்தையன்வலசு, வள்ளிபுரம், இச்சிப்பாளையம், ஒத்தக்கடை, வடக்கு-தெற்கு புதுப்பாளையம், கரட்டாம்பாளையம், பெருமாள் கோவில் புதூர், கல்வெட்டுப்பாளையம் மற்றும் கரட்டுப்புதூர்.

மொடக்குறிச்சி அருகே உள்ள நடுப்பாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- நடுப்பாளையம், வெள்ளோட்டம்பரப்பு, மலையம்பாளையம், வடுகனூர், வட்டக்கல்வலசு, கோம்புப்பாளையம், கருமாண்டம்பாளையம், செம்மாண்டாம்பாளையம், வேலப்பம்பாளையம், குட்டப்பாளையம், கொளாநல்லி, ஆராம்பாளையம், தேவம்பாளையம், கொம்பனைப்புதூர், பனப்பாளையம், கரட்டுப்பாளையம், தாமரைப்பாளையம், காளிபாளையம், மாரியம்மன் கோவில் புதூர், கருத்திப்பாளையம் மற்றும் கொளத்துப்பாளையம்.

மொடக்குறிச்சி கணபதிபாளையம் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- கணபதிபாளையம், ஆயிக்கவுண்டம்பாளையம், சாணார்பாளையம், வேலம்பாளையம். சின்னம்மாபுரம், பஞ்சலிங்கபுரம், என்.ஜி.புதூர், காங்கேயம்பாளையம், பாசூர், பச்சாம்பாளையம், சோளங்கபாளையம், ஈஞ்சம்பள்ளி, வாத்திகாடு வலசு, கொமரம்பாளையம், ராக்கியபாளையம், கல்யாணிபுரம், களத்துமின்னப்பாளையம், பழனிக்கவுண்டம்பாளையம், முனியப்பம்பாளையம், வேங்கியம்பாளையம், உத்தண்டிபாளையம், சாக்கவுண்டம்பாளையம், மன்னாதம்பாளையம், முத்துக்கவுண்டம்பாளையம், ஆர்.கே.ஜி.புதூர், கிளாம்பாடி மற்றும் செட்டிகுட்டை வலசு.

பெருந்துறை அருகே உள்ள திங்களூர் துணை மின் நிலையம்:- 

மின்தடை ஏற்படும் பகுதிகள்:- திங்களூர், கல்லாகுளம், வெட்டையன்கிணறு, பாப்பம்பாளையம், மந்திரிபாளையம், நல்லாம்பட்டி, சுப்பையன்பாளையம், தாண்டாகவுண்டன்பாளையம், சுங்ககாரன்பாளையம், சீனாபுரம், மேட்டூர், செல்லப்பம்பாளையம், வீராச்சிபாளையம், வீராணம்பாளையம், கராண்டிபாளையம், தலையம்பாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், பொன்முடி, குள் ளம்பாளையம், நெட்டசெல்லாபாளையம், கீழேரிபாளையம், சூரநாய்கனூர், பட்டகாரன்பாளையம், நெசவாளர் காலனி, மடத்துப்பாளையம், மம்முட்டி தோப்பு, நடுவலசு, ஊத்துப்பாளையம், மல்லநாய்கனூர், ஊஞ்சப்பாளையம், ரைஸ்மில்புதூர், சி.எம்.பாளையம், எல்லப்பாளையம், கோமையன் வலசு, தாசம்புதூர், வேலாங்காடு, மானூர்காடு மற்றும் ஸ்ரீநகர்.

திங்கள், 7 அக்டோபர், 2024

அந்தியூர் அருகே பர்கூரில் மின்வேலியில் நேரடியாக மின்சாரம் பாய்ச்சியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

அந்தியூர் அருகே பர்கூரில் மின்வேலியில் நேரடியாக மின்சாரம் பாய்ச்சியவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வனச்சரகம் தாமரைக்கரை பிரிவு பெஜிலட்டி காவல் சுற்றுக்கு உட்பட்ட கல்வாரை கிராமத்தில் வனச்சரக அலுவலர் பிரகாஷ் தலைமையில் வனப்பணியாளர்கள் மற்றும் தாமரைக்கரை மின்வாரியத்துறை பணியாளர்கள் கொண்ட குழுவினர் வனஎல்லையோரம் மற்றும் கிராம புறங்களிலும் அமைக்கப்பட்டுள்ள மின்வேலிகளில் நேரடியாக மின்சாரம் பாய்ச்சப்பட்டுள்ளதா என சோதனை செய்தனர்.

அப்போது, கல்வாரை கிராமத்தில் வசிக்கும் வெள்ளையன் மகன் செலம்பன் (வயது 40) என்பவருக்கு சொந்தமான சுமார் 2½ ஏக்கர் நிலத்தில் மஞ்சள் மற்றும் குச்சிக்கிழங்கு பயிர்களை பயிர் செய்துள்ள, நிலத்தினை சுற்றி அமைக்கப்பட்டுள்ள குறைந்த மின்அழுத்த மின்வேலியில் நேரடி மின்சாரம் உள்ளதா என கண்டறியும் கருவியினை கொண்டு வனப்பணியாளர்கள் சோதனை செய்தனர். 

அதில், நேரடி மின்சாரம் கம்பி வேலியில் பாய்ச்சியது உறுதி செய்யப்பட்டது. மேலும், செலம்பனுக்கு சொந்தமான நிலத்தில் மின்அறைக்கு அருகில் உள்ள மின்கம்பத்திலிருந்து நேரடியாக கொக்கியின் மூலம் கம்பி வேலிக்கு நேரடி மின்சாரம் கொடுக்கப்பட்டதையும் கண்டுபிடித்தனர். உடனே, அந்த நேரடி மின்சார இணைப்பினை மின்வாரியத்துறை பணியாளர்கள் துண்டித்தனர்.

பின்னர், ஈரோடு வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர் உத்தரவின் படி, செலம்பனை பிடித்து பர்கூர் வனச்சரக அலுவலகம் கொண்டு வந்து விசாரணை நடத்தினர். பின்னர், வன உயிரினக் குற்ற வழக்குப்பதிவு செய்து, ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், குற்ற செயலுக்கு மின்சாரத் துறையின் சட்ட விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ள வனத்துறையினர் கடிதம் மூலம் தெரிவித்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளனர்.
சத்தியமங்கலம் நகராட்சியில் கொமராபாளையம் ஊராட்சி இணைப்பை எதிர்ப்பு போராட்டம்

சத்தியமங்கலம் நகராட்சியில் கொமராபாளையம் ஊராட்சி இணைப்பை எதிர்ப்பு போராட்டம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வட்டம் கொமராபாளையம் ஊராட்சியை சத்தியமங்கலம் நகராட்சியில் இணைக்க அரசுக்கு பரிசீலனை அனுப்பப்பட்டுள்ளது. நகராட்சியில் இணைத்தால் 100 நாள் வேலை வாய்ப்பு பறி போகும்.

மத்திய அரசின் திட்டங்கள் எதுவும் இருக்காது, வரி உயர்வு பல மடங்கு உயரும். இதனால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் என கிராம சபை கூட்டத்தில் அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து தீர்மானம் நிறைவேற்றினர்.

இந்நிலையில், இன்று (7ம் தேதி) கொமராபாளையம் ஊராட்சி பகுதிகளில் இருந்து 1500க்கும் மேற்பட்ட பொதுமக்கள், அனைத்து கட்சியினர் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகத்தை கொமராபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் சரவணன் தலைமையில் முற்றுகையிட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து வந்த சத்தியமங்கலம் போலீசார், வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். மேலும், கோரிக்கை நிறைவேற்றா விட்டால் அடுத்த கட்ட போராட்டம் தொடரும் என போராட்டம் நடத்தியவர்கள் தெரிவித்தனர். இந்த முற்றுகை போரட்டத்தால் சத்தியமங்கலம் வட்டாட்சியர் அலுவலகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ஈரோடு மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

ஈரோடு மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று (7ம் தேதி) நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தலைமை வகித்தார். 

இதில், வீட்டுமனை பட்டா, மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு, முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை மற்றும் காவல் துறை நடவடிக்கை உள்ளிட்ட 224 கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றார்.

இதனையடுத்து, பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை உரிய துறை அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது உடனடி நடவடிக்கை எடுத்திட உத்தரவிட்டார். தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு நத்தம் நிறுத்தப்பட்டது நீக்கம் செய்த பட்டாவினை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, தாட்கோ மூலம் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தில் பதிவுபெற்ற தற்காலிக தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 9 நபர்களுக்கு தலா ரூ.1000 வீதம் ரூ.9 ஆயிரம் மதிப்பில் கல்வி, மகப்பேறு மற்றும் ஓய்வூதிய உதவித்தொகையினை வழங்கினார்.

மேலும், ஒரு பயனாளிக்கு ரூ.25 ஆயிரம் மதிப்பில் இயற்கை மரண உதவித்தொகையும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து இளங்கலை பொறியியல் பயிலும் கோசணம் பகுதியை சேர்ந்த ஒரு மாணவனுக்கு ரூ.50 ஆயிரத்துக்கான கல்வி உதவித்தொகையினையும் அவர் வழங்கினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ராமகிருஷ்ணசாமி, துணை ஆட்சியர் (பயிற்சி) சிவபிரகாஷ், மாவட்ட வழங்கல் அலுவலர் ராம்குமார், சமூக பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியர் செல்வராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் ராஜகோபால் உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அம்மாபேட்டை காவலர் தூக்கிட்டு தற்கொலை

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அம்மாபேட்டை காவலர் தூக்கிட்டு தற்கொலை

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த அம்மாபேட்டை அருகே உள்ள ஊமாரெட்டியூரைச் சேர்ந்தவர் செல்வக்குமார் (வயது 34). இவர் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணிபுரிந்து வந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு, அம்மாபேட்டை அருகே சின்னப்பள்ளம் காவல் சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அந்த வழியே வந்த வாகனங்களை சோதனை செய்த போது காவலர் செல்வக்குமார் குடிபோதையில் ஓட்டுநர் ஒருவரிடம் பணம் கேட்டு அடித்ததாக புகார் எழுந்தது.

இதுகுறித்த, காணொலிக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. இதுகுறித்து அறிந்த ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் விசாரணை நடத்தினார். பின்னர், காவலர் செல்வக்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதனையடுத்து, செல்வக்குமார் மிகுந்த மனவேதனையில் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்நிலையில், சம்பவத்தன்று செல்வக்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவல் அறிந்ததும் செல்வக்குமாரின் உறவினர்கள் அம்மாபேட்டை காவல் நிலையம் அருகே அம்மாபேட்டை - பவானி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், அங்கு பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், இதுகுறித்து அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.