செவ்வாய், 22 ஏப்ரல், 2025

ஆயிரம் ஆண்களுடன் உடலுறவில் ஈடுபட்டு உலக சாதனை படைத்த நடிகை..!

ஆயிரம் ஆண்களுடன் உடலுறவில் ஈடுபட்டு உலக சாதனை படைத்த நடிகை..!


அண்மையில், ஆன்லைன் உள்ளடக்க படைப்பாளரான போனி ப்ளூ மற்றொரு உலக சாதனையை முறியடித்து, உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதற்கு முன்பு அவர் மேற்கொண்ட '12 மணி நேரத்தில் 100 ஆண்களுடன் உடலுறவு' என்ற சவாலை விடவும் பெரிய அளவிலான சாதனையை செய்து இருக்கிறார்.

 இம்முறை, அவர் 1,000 ஆண்களுடன் உடலுறவில் ஈடுபடுவதை நேரலை செய்ய திட்டமிட்டு, அதை தனது OnlyFans தளத்தில் பகிர்ந்தார். மேலும் போனி இதை வெற்றிகரமாக முடித்தார்.

 போனி ப்ளூ, மற்றொரு OnlyFans படைப்பாளரான கமிலா அராஜோவுடன் இந்த திட்டத்தைப் பற்றி தெரிவிக்கையில்,

 அப்போது, இந்த நிகழ்வின் தளபாடங்கள் குறித்து கமிலா கேள்வி எழுப்ப, போனி, 'நான் ஒருவருடன் இருக்கும் போது வரிசையில் பின்னால் நிற்பார்கள், அவர்கள் அடுத்து என்னுடன் இருக்கப் போகிறார்கள் என்ற உற்சாகத்தில் இருப்பார்கள், இது அவர்களை மேலும் தூண்டும், என்று பதிலளித்தார்.  இது தனது புதிய உலக சாதனையாகவும் அமைந்ததாக மேலும் அறிவித்தார்.

 இதன் போது பல OnlyFans படைப்பாளர்கள் மற்றும் அவருடைய ரசிகர்கள் இதில் பங்கேற்றனர்.

 OnlyFans படைப்பாளரான ஜூலியா ஃபிலிப்போ, போனியுடன் சேர்ந்த போது எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்தார்.

இந்த புகைப்படத்தில், பல ஆண்கள் நீல முகமூடிகள் அணிந்து, ஒரு படுக்கையைச் சுற்றி கூடியிருப்பது தெரிகிறது. இது அவர்களின் அடையாளத்தை மறைக்கும் முயற்சியாக இருக்கலாம்.

மேலும், பாட்காஸ்ட் தொகுப்பாளர் ரயான் பவல், போனியுடன் சேர்ந்த வீடியோவை பகிர்ந்தார், இதில் அவர் இந்த நிகழ்வை ஆவணப்படுத்தியதாக தெரிகிறது.

ஆங்கிலத்தில் இதை Back Door Challenge என்று கூறுகிறார்கள். முன் வாசலை பயன்படுத்தாமல், பின் வாசலை மட்டும் பயன்படுத்துவது.

 இது பிரபலத்தையும், வருமானத்தையும் அதிகரிக்க உதவுகிறது என்றாலும், மறுபுறம், இத்தகைய சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் சமூகத்தில் எழுப்பும் கேள்விகளும் குறைவல்ல.

 இந்த போட்டி எங்கு சென்று முடியும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.24) மின்தடை ஏற்படும் இடங்கள்!

ஈரோடு மாவட்டத்தில் நாளை (ஏப்.24) மின்தடை ஏற்படும் இடங்கள்!

ஈரோடு மாவட்டத்தில் காசிபாளையம், கங்காபுரம் துணை மின் நிலைய மின் பாதைகள் மற்றும் சென்னம்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நாளை (ஏப்ரல் 24) வியாழக்கிழமை நடக்கிறது. இதனால், நாளை கீழ்க்கண்ட இந்த இடங்களில் குறிப்பிட்ட நேரம் மின்சாரம் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசிபாளையம் துணை மின் நிலைய மின் பாதை (காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் இடங்கள்:- டி.வி.கே.வீதி,ராதாகிருஷ்ணன் சாலை, மேற்கு அம்பேத்கர் வீதி, சூரம்பட்டி, கோவலன் வீதி, பாரதிபுரம், மோகன்குமாரமங்கலம் வீதி மற்றும் அண்ணா வீதி.

கங்காபுரம் துணை மின் நிலைய மின் பாதை (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் இடங்கள்:- குப்பன்காடு, கொளத்துப்பாளையம், மேட்டையன்காடு, தெற்குபள்ளம், அல்-அமீன் நகர், சூரிப்பாறை மற்றும் தொட்டம்பட்டி.

சென்னம்பட்டி துணை மின் நிலையம் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):- 

மின்தடை ஏற்படும் இடங்கள்:- குருவரெட்டியூர், தண்ணீர்பந்தல்பாளையம், கோணார்பாளையம், ஜி.ஜி. நகர், குரும்பபாளையம் மற்றும் மூங்கில்பாளையம்.
ஈரோட்டில் தெருநாய்கள், வளர்ப்பு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணி: 1ம்‌ தேதி தொடக்கம்!

ஈரோட்டில் தெருநாய்கள், வளர்ப்பு நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி போடும் பணி: 1ம்‌ தேதி தொடக்கம்!

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி துணை ஆணையாளர் தனலட்சுமி கூறியதாவது:-
கொரோனா நோய் பரவலின் போது தெருநாய்கள் இனப்பெருக்கம் அதிகமாக காணப்பட்டது. அதன் விளைவு தெருநாய்களின் தொல்லை காணப்படுவதாக அனைத்து பகுதிகளிலும் இருந்தும் புகார் வந்த வண்ணம் உள்ளது.

கருத்தடை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் (மே) 1ம் தேதி முதல் ஈரோட்டில் தெருநாய்களுக்கும், வளர்ப்பு நாய்களுக்கும் வெறிநோய் தடுப்பூசி போடப்பட உள்ளது.

பொதுமக்கள் இந்த முகாமை பயன்படுத்தி வீடுகளில் வளர்க்கும் நாய்களுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம். மேலும் தெரு நாய்கள் மாநகராட்சி மூலம் பிடிக்கப்பட்டு அவைகளுக்கு தடுப்பூசி போடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
ஈரோடு மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு 26ம் தேதி தடுப்பூசி முகாம்!

ஈரோடு மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு 26ம் தேதி தடுப்பூசி முகாம்!

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் ஹஜ் புனித யாத்திரை செல்பவர்களுக்கு தமிழக அரசின் சார்பில் தடுப்பூசி போடப்பட உள்ளது. இதற்கான சிறப்பு முகாம் வருகிற 26ம் தேதி (சனிக்கிழமை) மாவட்ட சுகாதார அலுவலகத்தில் நடக்கிறது.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஹஜ் புனித யாத்திரை செல்லும் ஆண்கள், பெண்கள் என 95 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு, சொட்டு மருந்து வழங்கப்படும். 65 வயதுக்கு மேற்பட்ட 7 பேருக்கு பிரத்தியேக தடுப்பூசி போடப்படும்.

சர்க்கரை பரிசோதனை, ரத்த அழுத்த பரிசோ தனை ஆகியவையும் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் 25ம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் வரும் 25ம் தேதி சிறிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் ஏப்ரல் 25ம் தேதி சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 25ம் தேதி வெள்ளிக்கிழமை சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் காலை 10 முதல் மதியம் 3 மணி வரை நடக்கிறது. வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் வாயிலாக நடத்தப்படும் இவ்வேலைவாய்ப்பு முகாம், வேலைநாடுநர்கள் மற்றும் வேலை அளிப்பவர்களுக்கு முற்றிலும் இலவசமாக செயல்படுத்தப்படுகிறது.

எனவே, ஈரோடு மாவட்டத்தில் தனியார் துறையில் பணிபுரிய ஆர்வமாக உள்ள அனைவரும் இந்த வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு பயனடையலாம். மேலும்,விவரங்களுக்கு ஈரோடு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை நேரிலோ அல்லது 86754 12356, 94990 55942 என்ற எண்களின் வாயிலாகவோ தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.
தமிழக அளவில் வரி வசூலில் ஈரோடு மாநகராட்சிக்கு 3வது இடம்: 58 அலுவலர்களுக்கு பாராட்டு!

தமிழக அளவில் வரி வசூலில் ஈரோடு மாநகராட்சிக்கு 3வது இடம்: 58 அலுவலர்களுக்கு பாராட்டு!

ஈரோடு மாநகராட்சியின் சார்பில் வரி வசூல் செய்த 58 அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர்‌ ராஜ கோபால் சுன்கரா கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
ஈரோடு மாநகராட்சியில் 2024-25ம் ஆண்டில் சொத்துவரி, காலியிடவரி, தொழில்வரி, குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள், திடக்கழிவு மேலாண்மை கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை இணைப்பு கட்டணம் ஆக மொத்தம் 4,27,338 வரி விதிப்பு எண்கள் உள்ளது.

அதற்கான வருடாந்திர நடப்புக் கேட்புத் தொகை ரூ.106.87 கோடி ஆகும். அதில் ரூ.87.19 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மொத்த வசூல் சதவீதம் 81.58 ஆகும். தமிழ்நாட்டில் உள்ள நகராட்சி நிர்வாக இயக்குநரகத்தின் கீழ் உள்ள 24 மாநகராட்சிகளில், ஈரோடு மாநகராட்சி சிறப்பான முறையில் வரி வசூல் செய்து 3-ம் இடத்தை பிடித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஈரோடு மாநகராட்சிக்கு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் வரி வசூல் செய்த அலுவலர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்ச்சி ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஏப்ரல் 22) நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா கலந்து கொண்டு 58 அலுவலர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், ஈரோடு மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், ஈரோடு மாநகராட்சி ஆணையர் (பொ) தனலட்சுமி உட்பட தொடர்புடைய துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சத்தியமங்கலம்: புஞ்சைபுளியம்பட்டி அருகே சீத்தர் பீடத்து தண்ணீர் தொட்டியில் விழுந்து 3½ வயது குழந்தை பலி!

சத்தியமங்கலம்: புஞ்சைபுளியம்பட்டி அருகே சீத்தர் பீடத்து தண்ணீர் தொட்டியில் விழுந்து 3½ வயது குழந்தை பலி!

புஞ்சைபுளியம்பட்டி அருகே சீத்தர் பீடத்து தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த 3½ வயது குழந்தை உயிரிழந்தது.

கோவை மாவட்டம் சிறுமுகை அருகே உள்ள தாயனூர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 26). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி பூர்ணிமா. இவர்களுக்கு 3½ வயதில் ஆதிரா என்ற ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில், பூர்ணிமாவின் தந்தை சந்திரசேகரன் (54) நேற்று மதியம் ஆதிராவை ஆட்டோவில் அழைத்துக் கொண்டு ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டி அருகே மாதம்பாளையம் காக்கா பொன் தோட்டத்தில் உள்ள கலியுக சித்தர் பீடத்துக்கு வந்தார்.

பின்னர், அவர் சாமி பீடத்தில் தியானம் செய்து கொண்டிருந்தார். ஆதிரா அருகே நின்று விளையாடிக் கொண்டிந்தான். இந்த நிலையில் சந்திரசேகரன் தியானம் முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது ஆதிராவை காணவில்லை.

இதனால் அதிர்ச்சி அடைந்து தேடிப்பார்த்தார். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள 4 அடி ஆழமுள்ள தண்ணீர் தொட்டியில் ஆதிரா விழுந்து மூழ்கி கிடந்தான். உடனே அவனை ஆட்டோவில் தூக்கிக்கொண்டு அன்னூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு ஆதிரா ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், இதுகுறித்து அவர் புஞ்சைபுளியம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.