சேலம்.
S.K. சுரேஷ்பாபு.
தேங்காய் சுடும் பண்டிகையை ஒட்டி 350 பயனாளிகளுக்கு தேங்காய் சுடுவதற்கான மூலப்பொருட்களை வழங்கி மகிழ்ந்த ஸ்ரீ காவேரி மாரியம்மன் நண்பர்கள் குழுவினர்.
தமிழ் மாதங்களில் அம்மனுக்கு உகந்த மாதமாக ஆடி மாதம் விளங்குகிறது. ஆடி முதல் நாள் அன்று இந்துக்கள் அனைவரும் தேங்காய் சுட்டு இறைவனுக்கு படைத்து வழிபாடு நடத்துவது வழக்கம். அதன்படி ஆடி முதல் நாளான இன்று தேங்காய் சுடும் பண்டிகை சேலம் மாநகரம் உட்பட மாவட்ட முழுவதும் கலை கட்டியது. இதனிடையே சேலம் ஜான்சன் நகர் ஸ்ரீ காவேரி மாரியம்மன் நண்பர்கள் குழுவின் சார்பாக ஆண்டுதோறும் ஆடி முதல் நாள் அன்று தேங்காய் சுடுவதற்கு மூலப்பொருட்களான தேங்காய் மற்றும் தேங்காய் குச்சி இது தவிர தேங்காய் உள்ளே செலுத்தும் பொருட்கள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவது வழக்கம். அதன்படி ஐந்தாம் ஆண்டு நிகழ்வாக சேலம் ஜான்சன் நகரில் உள்ள நண்பர்கள் குழு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்விற்கு தலைவர் தேவதாஸ் முன்னிலையில் செயலாளர் சண்முகவேல் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு 350 பயனாளிகளுக்கு தேங்காய் சுடுவதற்கான மூலப்பொருட்களை வழங்கி மகிழ்ந்ததோடு, ஆடி மாத வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்வில் நிர்வாகிகள் ஏழுமலை, போத்தா, தமிழ்மணி, மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.