வெள்ளி, 13 ஜனவரி, 2023

21 குண்டுகள் முழங்க மத்திய எல்லை பாதுகாப்பு படை வீரருக்கு ஈரோடு காவிரி கரையில் அமைந்துள்ள ஆத்மா மின் மயானத்தில்,ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டு வருகிறது...

திரிபுராவில் மாரடைப்பால் மரணம் அடைந்த ஈரோடு எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது - ஈரோடு ஆத்மா மின் மயானத்தில் ராணுவ மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி பகுதியை சேர்ந்தவர் வடிவேல் (38), இவரது மனைவி நித்தியா, இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். வடிவேல் இந்திய ராணுவத்தில் சேர்ந்து எல்லை பாதுகாப்பு படை வீரராக கடந்த 18 வருடமாக பணியாற்றி வந்தார். இவர் பங்களாதேஷ் எல்லையான, திரிபுராவில் அகர்தளா என்ற இடத்தில், எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றி வந்தார். தினமும் வடிவேல் தனது மனைவி உடன் போனில் பேசுவது வழக்கம், இந்நிலையில் கடந்த 2 நாட்கள் முன்பு கூட வடிவேல் தனது மனைவியுடன் செல்போனில் பேசினார், அப்போது திரிபூராவில் கடும் குளிர் நிலவி வருவதாக மனைவியுடம் கூறியுள்ளார். இந்நிலையில் திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட வடிவேல் அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த 11ஆம் தேதி, சிகிச்சை பலனின்றி அவர் மூளையில் ரத்தம் உறைந்து ( Brine stoke )ல் காலமானார், இந்ந தகவல் வடிவேல் குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. இதனால் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து, வடிவேல் உடல் சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டது,

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: