ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா இருந்தார். இவர் கடந்த 4ம் தேதி காலமானார்.
இதையடுத்து அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27 ல் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சியே ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
இந்த தேர்தலில் தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடுகிறது. அதன்படி, ஆனந்த் என்பவர் தேமுதிக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக, ஓ பன்னீர் செல்வம் அணியினரும் வேட்பாளர்களை அறிவிக்க உள்ளனர். அதேபோல அமமுக டிடிவி தினகரனும் வேட்பாளரை அறிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அமமுக சார்பில் ஈரோடு மாநகர் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவ பிரசாத் போட்டியிடுவார் என்று அறிவித்தார். இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிமனை அலுவலகத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திறந்து வைத்தார்.
பிறகு நாம் தமிழர் கட்சியின் ஈரோடு மாவட்ட மகளிர் பாசறை துணை செயலாளராக இருக்கும் மேனகாவை ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்பாளராக அறிவித்தார். பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ‘ஏழ்மை, வறுமை, ஊழல், லஞ்சம் இவற்றிற்கு யார் காரணம். வாக்குக்கு கையேந்தும் நிலைமையில்தான் மக்களை வைத்துள்ளார்கள்.
தலைவனை மக்கள் தேட வேண்டும். வழியில்லை என்று சொல்லக்கூடாது. வழியை உருவாக்க வேண்டும்.ஆளும் கட்சி ஜெயிக்கும் என்பது பிம்பம். மக்கள் மாற்றத்தை விரும்பினால் எந்த கட்சியாக இருந்தாலும் புரட்டிப் போடுவார்கள். சந்துக்கு சந்து கணக்கெடுத்து காசு கொடுக்கிறார்கள் என்று பேசினார்.
இளங்கலை அறிவியல் ஆடை வடிவமைப்பு படித்துள்ள மேனகா, மகளிர் பாசறை துணை செயலாளராக இருந்து வருகிறார். மேனகா தற்போது ஈரோடு மாவட்ட மகளிர் பாசறை துணை செயலாளராக செயல்பட்டு வரும் நிலையில் அவர் ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதியில் போட்டியிடுகிறார்.
ஞாயிறு, 29 ஜனவரி, 2023
Author: shabanewstamil
We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.
0 coment rios: