ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் மதசார்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அவர்களுக்கு கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு தமிழக பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர், பிபீ அக்ரஹாரம் பள்ளிவாசலில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.
அவரோடு எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு கிழக்கு தொகுதி தலைவர் கேபிள்.சபீர் அஹமது தொகுதி செயலாளர் தளபதி.பசீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதேபோல் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு தெற்கு மாவட்ட தலைவர் ப.முகமது லுக்மானுல் ஹக்கீம், ஈரோடு 37வது வார்டுகுட்பட்ட ஜானகியம்மாள் லேஅவுட், தாருல் உலூம் சித்திக்கியா பள்ளிவாசலிலும், ஈரோடு தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் குறிஞ்சி பாஷா, மாவட்ட பொருளாளர் ம.ஃபர்ஹான் அஹமது அவர்கள் 36வது வார்டுக்கு உட்பட்ட சுல்தான்பேட்டை பள்ளிவாசலிலும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இப்பிரச்சாரத்தில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் ஈரோடு மேற்கு தொகுதி பொருளாளர் ஷேக் பாஷா, 37 வது வார்டு தலைவர் கராத்தே சிராஜுதீன், செயலாளர் முகமது பர்மானுல்லா, செயல்வீரர்கள் ஷாருக்கான், சுல்தான், ரசீது, அபுதாஹிர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 coment rios: