முன்னாள் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகள் மற்றும் முன்னாள் அமைச்சர்களுடன் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக ஈரோடு வில்லரசம்பட்டிக்கு வந்தார்.
அங்கு பல்வேறு பொது அமைப்புகளை சேர்ந்த சில நிர்வாகிகளையும் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.
பின்னர் அவரது நண்பர்களும் ஆதரவாளர்களுமான முன்னாள் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகளுடன் வில்லரசம்பட்டி நால்ரோடு வந்தார், அங்கு சாலையோரத்தில் உள்ள பேக்கரி கடைக்கு சென்றார். அனைவருக்கும் டீ ஆர்டர் செய்து, பொதுமக்கள் உட்காரும் பெஞ்சில் உட்கார்ந்து டீ குடித்தார். அவர் அருகில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் உட்கார்ந்து இருந்தார். தேர்தல் தொடர்பாக அவர் கூறிய ஆலோசனைகளை எடப்பாடி பழனிசாமி உன்னிப்பாக கேட்டுக்கொண்டே டீயையும் பருகினார்.
மாவட்ட செயலாளர் கே.வி.ராமலிங்கம், பகுதி கழகச் செயலாளர் கே.சி பழனிச்சாமி, மண்டல தலைவர் பெரியார் நகர் மனோகரன் ஆகியோர் யாருக்கு சர்க்கரை போட்ட டீ, யாருக்கு சர்க்கரை போடாத டீ என்று கேட்டு வாங்கி கொடுத்தனர்.
அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு உடன் இருந்தார், தமாகா மாநில பொதுச்செயலாளர் விடியல் எஸ்.சேகர், இளைஞர் அணி மாநில தலைவர் எம்.யுவராஜா, மாவட்ட தலைவர் விஜயகுமார், முன்னாள் மேயர் கே.சி.பழனிச்சாமி உள்பட பலரும் இருந்தனர்.
0 coment rios: