ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே கர்நாடகா மாநிலத்தில் இருந்து மக்காச்சோளம் ஏற்றிக் கொண்டு வந்த லாரி மலைப்பாதையில் மோதி விபத்துக்குள்ளானது.
கர்நாடக மாநிலம் ராமபுரத்தில் இருந்து மக்காச்சோளம் ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த லாரியை திருப்பூர் மாவட்டம் பெரிய பொம்மன்நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிச்சாமி (வயது 45) என்பவர் ஓட்டி வந்தார். லாரியானது, அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதியில் இரண்டாவது வளைவில் வந்தபோது எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து இடதுபுற மலைப்பாதையில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்தில், டிரைவர் பழனிச்சாமி காயமின்றி உயிர் தப்பினார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவம் காரணமாக பர்கூர் மலைப்பாதையில் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
0 coment rios: