ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி தொகுதி, அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சி, குடுமியம்பாளையம் பகுதியில் இருந்து பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சி. சரஸ்வதி, பாரதிய ஜனதா கட்சியின் தெற்கு மாவட்ட தலைவர் வி. சி. வேதானந்தம் ஆகியோர் முன்னிலையில் தங்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொண்டனர்.
பாரதிய ஜனதா கட்சியின் மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய தலைவர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாவட்டத் துணைத் தலைவர்கள் பாலசுப்பிரமணியம், குரு குணசேகர், கலை கலாச்சார பிரிவு ஒன்றிய துணைத் தலைவர் சரவணன், வர்த்தக அணி ஒன்றிய செயலாளர் அருண்குமார், ஒன்றிய செயலாளர் ஜெகநாதன், ஊடகப்பிரிவு செல்வம் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
நிகழ்விற்கான ஏற்பாடுகளை கட்சியில் இணைந்த வெள்ளோடு சக்தி பாலு, சிரஞ்சீவி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.
0 coment rios: