புதன், 8 பிப்ரவரி, 2023

இபிஎஸ்க்கு இரட்டை இலை கொடுத்ததால் ஓபிஎஸ் அணி நிர்வாகி திமுகவுக்கு தாவினார்..! பரபரக்கும் தேர்தல் களம்


எடப்பாடி பழனிசாமிக்கு இரட்டை இலையை விட்டு கொடுத்ததால் அதிருப்தியில், அதிமுக ஓபிஎஸ் அணி நிர்வாகி திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார், பாஜக.வின் கைப்பாவையாக ஓபிஎஸ் செயல்படுவதாக குற்றச்சாட்டு. 

தமிழ்நாடு பாடநூல் கழக முன்னாள் தலைவரும், அதிமுக (ஒபிஎஸ்) சிறுபான்மை பிரிவு செயலாளரும், எம்ஜிஆர் மக்கள் இயக்க தலைவர் கா.லியாகத் அலிகான், ஈரோட்டில் அமைச்சர் சு.முத்துசாமி முன்னிலையில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபட போவதாக பேட்டியளித்தார்.

அவருடன் ஓபிஎஸ் அணி தொழிற்சங்க நிர்வாகிகளும், ஈரோடு பாரதீய ஜனதா கட்சியின் தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் EVKS இளங்கோவுக்கு ஆதரவு திரட்டி வெற்றி பெற நாளை முதல் தீவிர பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவித்தார்.

எடப்பாடி அணிக்கு இரட்டை இலையை விட்டு கொடுத்ததுடன், பாஜக வின் கைப்பாவையாக ஓபிஎஸ் செயல்படுவதாகவும், அவரின் செயல்பாடு பிடிக்காத காரணத்தால் அங்கிருந்து விலகி திமுகவில் 
எம்.ஜி.ஆர் இயக்கம் உருவாக்கியதாக கா லியாகத் அலிகான் தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: