ஈரோடு மாவட்டத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய போலீசார் இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம்,
அதன்படி ஈரோடு தாலுகா போலீஸ் நிலையத்தில் சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றிய துரைசாமி அறச்சலூர் காவல் நிலையத்துக்கும், ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் நிலையத்தில் சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றிய கந்தசாமி கடத்தூர் போலீஸ் நிலையத்திற்கும், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றிய மோகன்ராஜ் கவுந்தப்பாடி காவல் நிலையத்திற்கும், பவானி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய அசோகன் கருங்கல்பாளையம் காவல் நிலையத்திற்கும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் சித்தோடு போலீஸ் நிலையத்தில் சப் - இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ஆர்.துரைசாமி ஈரோடு அரசு ஆஸ்பத்திரி காவல் நிலையத்திற்கும், வரப்பாளையம் போலீஸ் நிலையத்தில் சப் -இன்ஸ்பெக்டராக பணியாற்றிய முருகசாமி ஈரோடு சமூக நீதி மற்றும் மனித உரிமை பிரிவுக்கும், ஈரோடு கட்டுப்பாட்டுறை காவல் சப் - இன்ஸ்பெக்டர் நந்திஸ்வரன் அம்மாபேட்டை காவல் நிலையத்திற்கும், சத்தி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய வாசுகி ஈரோடு நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும் என மொத்தம் 20 சப் - இன்ஸ்பெக்டர்கள் ஈரோடு மாவட்டத்தில் ஒரே நாளில் இட மாற்றம் செய்து ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சசிமோகன் உத்தரவிட்டுள்ளார்.
0 coment rios: