ஆவின் கொள்முதல் செய்யும் 1 லிட்டர் பசும் பாலுக்கு ரூ.42ஆகவும், எருமைப்பாலுக்கு ரூ.51ஆகவும் உயர்த்தி வழங்கிட வேண்டும் என பால் உற்பத்தியாளர்கள் கருப்புக் கொடி ஏற்றி, கருப்பு பேட்ச் அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்...
பால் உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால், வருகின்ற 16ஆம் தேதி அனைத்து கிராம ஆவின் பால் கூட்டுறவு சங்கங்கள் முன்பாக கரவை மாடுகளுடன் சாலை மறியல் ஈடுபட போவதாகவும் அறிவிப்பு..!
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் சார்பில் ஆவின் பால் கூட்டுறவு அமைப்புகளின் சங்க உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள், வாழ்வாதாரம் காத்திட தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம ஆவின் பால் கூட்டுறவு சங்கங்கள் முன்பாக மாநில பொருளாளர் K.ராமசாமி கவுண்டர் தலைமையில் கருப்புக் கொடி போராட்டம் நடைபெற்று வருகிறது.
இந்த கருப்பு கொடி போராட்டத்தில் ஆவின் கொள்முதல் செய்யும் 1 லிட்டர் பசும் பாலுக்கு ரூ 42/- ஆகவும், எருமைப்பாலுக்கு ரூ.51/- ஆகவும் உயர்த்தி வழங்கிட வேண்டுகிறோம், ஆவினுக்கு பால் வழங்கும் அனைத்து கறவையினங்களுக்கும் ஆவின் நிறுவன செலவில் "தமிழக முதல்வர்" பெயரில் இலவச காப்பீடு வசதி செய்து கொடுத்திட வேண்டும், ஆவின் பால் கூட்டுறவு அமைப்புகளுக்கு ஆணி வேராய் செயல்படும் கிராம சங்க பணியாளர்களை பணி வரன்முறைப் படுத்த தடையாக உள்ள TNCS விதி 149-ன் வகை முறைகளில் இருந்து விதிவிலக்கு அளித்து அவர்களை ஆவின் பணியாளர்கள் ஆக்கவேண்டும், முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் அரசு பணியாளர்களுக்கு உள்ள அவசரகால மருத்துவ சேவையை ஆவின் சங்க பணியாளர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
இந்தக் கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றாவிட்டால், வருகின்ற 16ஆம் தேதி அனைத்து கிராம ஆவின் பால் கூட்டுறவு சங்கங்கள் முன்பாக கரவை மாடுகளுடன் சாலை மறியல் ஈடுபட போவதாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் மாநில பொருளாளர் K.ராமசாமி கவுண்டர் அறிவித்துள்ளார்.
0 coment rios: