திருப்பூரில் வடமாநில தொழிலாளி தண்டவாளத்தில் சடலமாக மீட்பு. - அடித்து கொலை என போலீசார் விசாரணை வடமாநில தொழிலாளர்கள் குவிவதால் பரபரப்பு.
திருப்பூரில் பனியன் தொழிலாளியாக பணியாற்றி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த சஞ்சீவ் குமார் என்பவர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் சடலமாக மீட்கப்பட்டார்.
அவர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்த நிலையில், சஞ்சீவ் குமாரின் செல்போன் உள்ளிட்டவை காணவில்லை, அவர் அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் ரயில்வே இருப்புபாதை காவல் நிலையம் முன்பு குவிந்து வருவதால் பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது.
0 coment rios: