ஈரோடு எஸ்.கே.சி சாலையில் உள்ள நடுநிலைப்பள்ளியில் ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் மற்றும் கே.கே.எஸ்.கே சமூக நல அறக்கட்டளை இணைந்து வழங்கும் அரசு பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களுக்கான ஊட்டச்சத்து மேம்பாட்டு திட்டம் துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் தலைவர் எம் சின்னச்சாமி தலைமை தாங்கினார், செயலாளர் எஸ் கணேசன், பொருளாளர் எஸ்.கே.எம் ஸ்ரீ சிவக்குமார் முன்னிலை வகித்தனர், தலைமையாசிரியர் கே.சுமதி அனைவரையும் வரவேற்று பேசினார்.
இத்திட்டம் மூலம் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வாட்டசாட்டம் என்கிற சிறுதானிய ஊட்டச்சத்துமாவு மற்றும் வாரத்திற்கு ஆறு முட்டை என ஊட்டச்சத்து குறைபாடுள்ள 58 மாணவ மாணவிகளுக்கு இன்று வழங்கப்பட்டது.
ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் அமைப்பின் சுகாதாரக் குழு தலைவர் டாக்டர் அபுல் ஹசன் ஊட்டச்சத்து பற்றியும் மாணவர்களின் வயதுக்கேற்ற எடை உயரம் இருக்க வேண்டும் என்பது பற்றியும் சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சி முடிவில் உதவி ஆசிரியர் மல்லிகா நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவிகள், பெற்றோர்கள், ஒளிரும் ஈரோடு குழு உறுப்பினர்கள், ஊட்டச்சத்து ஆலோசனை நிபுணர்கள் மற்றும் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 coment rios: