
ஈரோடு மாவட்டம், அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நேற்று (மார்ச்.07) செவ்வாய்க்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்றது. அந்தியூர் மற்றும் அந்தியூரை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களில் இருந்து 5,127 பருத்தி மூட்டைகளை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.
இதில் ஒரு கிலோ பருத்தி குறைந்த பட்சமாக 72 ரூபாய் 49 பைசாவிற்கும், அதிகபட்சமாக 80 ரூபாய் 19 பைசாவிற்கும், சராசரியாக 78 ரூபாய் 29 பைசாவிற்கும் விற்பனை செய்யப்பட்டது. மொத்தம் 1632.96 குவிண்டால் பருத்தி, ஒரு கோடியே 23 லட்சத்து 50 ஆயிரத்து 589 ரூபாய்க்கு ஏலம் போனது.
0 coment rios: