ஈரோடு மாவட்டம் வெண்டிபாளையம் துணை மின் நிலையம் மற்று கொடுமுடி துணை மின் நிலையம் பிலிக்கல்பாளையம் மின்பாதையில் நாளை (மார்ச்.09) வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால், இந்த பகுதிகளில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை மின்வாரியம் சார்பில், மின் கம்பங்கள், மின்மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும், இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இதனால், நாளை பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு நல் ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
வெண்டிபாளையம் துணை மின் நிலையம் (காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை)
மின்தடை செய்யப்படும் பகுதிகள்
வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளகவுண்டன் பாளையம், கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரியம், நொச் சிகாட்டுவலசு, சோலார், சோலார்புதூர், நகராட்சி நகர், ஜீவாநகர், போக்குவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல் ந துறை, கருக்கம்பாளையம், நாடார்மேடு, 46 புதூர் 19ரோடு எ பகுதி, சாஸ்திரிநகர்.
கொடுமுடி துணை மின் நிலையம் பிலிக்கல்பாளையம் மின்பாதை (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை)
மின்தடை செய்யப்படும் பகுதிகள்
சோளக்காளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம், பெரியவட்டம், ஆவடையார்பாறை, வருந்தியபாளையம், வெங்கமேடு, கொடுமுடி கடை வீதிகள் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் இருக்காது.
0 coment rios: