தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்களுக்கு எந்தவிதமான பாதிப்பு இல்லை என்றும் அனைவரும் பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் ஜெயின் சமூக நலச்சங்க தலைவர் பிரகாஷ் ஜெயின் தெரிவித்துள்ளார்.
வட மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து ஜெயின் சமூக நலச் சங்க தலைவர் திரு. பிரகாஷ் ஜெயின் ஈரோட்டில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில்,
தான் ஈரோட்டில் 40 ஆண்டுகளாக வசித்து வருவதாகவும்,
தன்னைப் போல மூன்று ஆயிரத்திற்கும் அதிகமான குடும்பங்களை சேர்ந்தவர்கள் சுமார் 25 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வருவதாகவும் தங்களுக்கு இதுவரை எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டது இல்லை என்றும் கூறினார்.
மேலும், கடந்த திமுக ஆட்சியானாலும், அதிமுக ஆட்சியியானாலும், யாராக இருந்தாலும் தங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தொழில் செய்து வருவதாகவும், உள்ளூரில் உள்ள அனைத்து தமிழ் மக்களும், தங்களுடன் நல்ல முறையில் நட்பு பாராட்டி வருவதாகவும், அரசும் காவல் துறையும் போதிய அளவு ஒத்துழைப்பு தருவதாகவும் கூறினார்.
இந்த சந்திப்பின்போது உத்தரவு பிரதேசத்தை சேர்ந்த ஈரோட்டில் தொழில் புரியும் ராஜேஷ் அகர்வால் மற்றும் புலம் பெயர் தொழிலாளர்கள் உடன் இருந்தனர்..
0 coment rios: