புதன், 12 ஏப்ரல், 2023

பெருந்துறையில் ஆம்னி பேருந்தும் - லாரி மோதிய விபத்தில் டிரைவர் உட்பட இருவர் உயிரிழப்பு - பயணிகள் 11 பேர் படுகாயம்..!


ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ஆம்னி பேருந்தும் - லாரி மோதிய விபத்தில் டிரைவர் உட்பட இருவர் உயிரிழந்தார், 11 பேர் படுகாயமடைந்துள்ளனர் - படுகாமடைந்த 12 பேரில் இருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது - இச்சம்பவம் பெருந்துறையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...

தனியார் ஆம்னி பஸ் சென்னையில் இருந்து பொள்ளாச்சி செல்வதற்காக சேலம் - கோவை செல்லும் சுங்கச் சாலையில்  பெருந்துறை ஸ்ரீ பிளஸ் மஹால் எதிரில் உள்ள மேம்பாலம் முன்பு சென்று கொண்டிருந்தது, பஸ்சை காஞ்சிபுரத்தைச் சேர்ந்த ஓட்டுனர் பாலமுருகன் வயது ( 55 ) ஓட்டி சென்றார்,

இன்று அதிகாலை, ஆமினி பஸ்ஸிக்கு, முன்னாள் சென்று கொண்டிருந்த அடையாளம் தெரியாத லாரி ஒன்றின் மீது பின்புறமாக ஆம்னி பஸ் பலமாக மோதியதில் இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே பஸ் ஓட்டுனர் பாலமுருகன் இறந்து போனார், 

இந்த விபத்தில்  கன்னியாகுமரியைச் சேர்ந்த உடன் வந்த டிரைவர் ஜோஸ்வா (27),  
பல்லடம் லட்சுமி நகரை
ஜான் நேசன்(28) ஜெனி (26) ஆகிய மூவர் தொடர்ந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,

இதன் தொடர்ச்சியாக பேருந்தில் பயணம் செய்த, உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீவித்யா (23) ஊட்டி கூடலூரை சேர்ந்த டேவிட் ராஜ் (50 )
ஜான்சி மேரி (30) குருசம்மா (46) உமேஷ் (12 ), பல்லடத்தைச்சேர்ந்த மனோஜ் (27), சென்னை சோலையூரை சேர்ந்த பூங்கொடி (46), திருப்பூர் தென்னம்பாளையத்தைச் சேர்ந்த ஆதர்ஷ்'(26), திருப்பூர் கே.ஜி கார்டனைச் சேர்ந்த ராமாயி (65) ஆகியோர் பலத்த காயம் அடைந்தனர், 

விபத்து குறித்து பெருந்துறை காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைடுத்து,அங்கு வந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்கி அனுப்பி வைக்கப்பட்டனர், 

இந்த சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: