செவ்வாய், 24 அக்டோபர், 2023

சத்தியமங்கலம் அருகே வாகனத்தை மறித்து உருளைக்கிழங்கு மூட்டையை தூக்கி சென்ற யானை

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன. இவ்வனப்பகுதி வழியாக தாளவாடி, ஆசனூா் வனப்பகுதி வழியாக தமிழக, கர்நாடக மாநிலங்களை இணைக்கும் சத்தியமங்கலம்- மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இச்சாலையில் வனவிலங்குகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி உலவி வருவதும், சாலையைக் கடப்பதும் வாடிக்கையாக உள்ளது.

இந்நிலையில், ஆசனூர் அருகே சாலையில் நடமாடிய ஒற்றை காட்டு யானை ஒன்று அந்த வழியாக வந்த பிக்கப் வேனை நிறுத்தியது. அப்போது சாலையின் ஓரமாக‌ இருந்த யானையை தாண்டி சென்று விடலாம் என எண்ணி ஓட்டுனர் பிக்கப் வேனை இயக்கிய போது, காட்டு யானை அந்த பிக்கப் வேனை தனது தும்பிக்கையால் பிடித்து நிறுத்தியது. அதன் பிறகு மேல் பகுதியில் வைத்திருந்த உருளைக்கிழங்கு மூட்டையை தும்பிக்கையால் இழுத்து கீழே தள்ளியது. பின்பு உருளைகிழங்கு மூட்டையை உண்பதற்காக எடுத்துச் சென்றது.

இச்சம்பவத்தை பார்த்ததும் சாலையில் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்தி கொண்டதால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: