ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது,
அதன் ஒருபகுதியாக, நேற்று இரவிலிருந்தே ஈரோடு மாநகரின் மீனாட்சி சுந்தரம் சாலை, ஈவிஎன் சாலை, சூரம்பட்டி நால்ரோடு, காந்திஜி சாலை, பேருந்து நிலையம், மணிக்கூண்டு, பன்னீர் செல்வம் பார்க், இந்திரா நகர், கருங்கல்பாளையம், மரப்பாலம், வெண்டிபாளையம், வீரப்பன்சத்திரம் உள்பட மாநகரின் பிரதான பகுதிகளில் உள்ள சாலைகளில் பெய்த கனமழையால் வெள்ளம் போல் மழைநீர் பெருக்கெடுத்து ஓடி, மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள காடாக காட்சியளித்தது.
தொடர்ந்து, விடிய விடிய கனமழையாக மாறியது. ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது, இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல தேங்கி உள்ளது.
ஈரோடு மாநகரின் மழைநீர் வெளியேற ஒரே வாய்ப்பாக உள்ள ஈரோடைகளான பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளில் கணிசமான மழை நீர் வெளியேறி, தற்போது பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஈரோட்டில் பல பகுதிகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடினாலும் கூட, பெரும்பள்ளம் ஓடை, பிச்சைக்காரன் பள்ளம் ஓடைகளில் 2 கரைகளையும் தாண்டி பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளை வெள்ள நீர் சூழ்ந்து மழை நீர் வெளியேறி வருகிறது, பிச்சைக்காரன் பள்ளம் ஓடையில் வளர்ந்து நிற்கும் செடி கொடிகளையும் மறைத்துக்கொண்டு, மழைநீர் சென்று கொண்டிருக்கிறது.
இதனை தொடர்ந்து, பிச்சைக்காரன் பள்ளம் ஓடையை ஒட்டியுள்ள பகுதியான மல்லி நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் உள்ள சாலைகளை மூழ்கியவாறும், அடுக்குமாடி குடியிருப்புகளை சூழ்ந்தவாறு சென்று கொண்டிருப்பதாலும், இந்த அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது, இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களை கூட இயக்க முடியாமல் இப்பகுதி பொதுமக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி உள்ளனர், இதனால் ஈரோடு மல்லி நகர், அன்னை சத்யா நகர் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது, இது குறித்து ஈரோடு மாநகராட்சி அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டோரிடம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் புகார் கூறியும் இதுவரை யாரும் வரவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.
மேலும் பிச்சைக்காரன்பள்ளம் ஓடையை தூர்வாரி சுத்தம் செய்தால் இப்பபிரச்சனைக்கு நிரந்தர தீர்வு எனவும் இப்பகுதி பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். இதே பகுதியில் கடந்த கடந்த பத்து நாட்களுக்கு முன்பு தமிழக வீட்டு வசதித் துறை அமைச்சர் சு முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
0 coment rios: