சனி, 25 நவம்பர், 2023

ஈரோட்டில் டவர் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த வட மாநில வாலிபர்; 15 மணி நேரமாக போராடி மீட்பு

ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் முன்பதிவு செய்யும் டிக்கெட் கவுன்டர் கட்டிடம் அருகே ரயில் டிரைவர்கள் அலுவலகம் உள்ளது. இந்நிலையில், நேற்று மதியம் சுமார் 2.45 மணியளவில் ரயில்வே ஸ்டேஷனுக்குள் நுழைந்த 35வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவர், ரயில்வே ஸ்டேஷன் 1வது நடைமேடை அருகே உள்ள 80 அடி உயர ஹைமாஸ் லைட் டவரில் விறுவிறுவென மேலே ஏறினார். இதைப்பார்த்த ரயில்வே ஊழியர்கள் அந்த நபரை கீழே இறங்க சொல்லி சத்தம் போட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு ரயில்வே போலீசார், ஈரோடு தெற்கு போலீசார் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் டவரின் மீது இருந்த வடமாநில வாலிபரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது, அந்த நபர், ‘தனக்கு பல பிரச்னைகள் இருப்பதாகவும், நான் கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்றும், சர்ச் பாதிரியாரை வர சொல்லுங்கள்’ என விடப்பிடியாக கூறி விட்டார். மேலும், அந்த வாலிபர் செல்போன் ஒன்று வேண்டும் என கேட்க, அங்கு இருந்த போலீசார் ஒரு செல்போனை கீழே வைத்தார். அந்த செல்போனை எடுக்க கீழே வந்த போது, அவரை போலீசார் பிடிக்க முயன்றதால், அந்த நபர் செல்போனை எடுக்காமல் மீண்டும் டவரின் மீது ஏறி கொண்டார். 

தொடர்ந்து மாலை 4.30 மணியளவில் பெய்த மழையிலும் டவரில் இருந்து கீழே இறங்காமல் மழையில் நனைந்தபடி மேலேயே உட்கார்ந்து இருந்தார். இதையடுத்து ஈரோடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினர் டவரில் ஏறிய வட மாநில வாலிபரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்கு அருகே வந்தால் நான் கீழே குதித்து விடுவேன் என கூறியதால், தீயணைப்பு வீரர்கள் அருகில் செல்லவில்லை. தொடர்ந்து சர்ச் பாதிரியார் போல உடை அணிந்து போலீசார் ஒருவர் டவரில் மீது ஏறி மேலே சென்றார். அப்போது, அந்த நபர், பாதிரியார் உடை அணிந்து வந்தவர் பாதிரியார் இல்லை என்பதை அறிந்ததும், அவரிடம் பேசவும், கீழே இறங்கவும் மறுப்பு தெரிவித்தார். 

இந்த தற்கொலை மிரட்டல் நாடகம் நேற்று நள்ளிரவு விடிய விடிய தொடா்ந்ததால் அவரை மீட்க முடியாமல் போலீசாரும், தீயணைப்பு துறையினரும் திணறினர். இந்நிலையில்,  இன்று அதிகாலை மூன்று மணிக்கு மேல், அந்த வாலிபர் டவரின் மீதே தூங்கிவிட்டார், இதனையடுத்து, வேகமாக டவர் ஏறத் தெரிந்த தீயணைப்பு வீரர், தவறின் மீது ஏறி அந்த வாலிபரை லாவகமாக பிடித்தார், உடனடியாக மேலும் சில தீயணைப்புத் துறை வீரர்களும் டவரின் மீது சென்று, மீட்டுக் கொண்டு வந்தனர், ( சுமார் 15 மணி நேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்தது ), அப்படியிருந்தும், தீயணைப்பு துறைனாரின் பிடியிலிருந்து விலகி, 30 அடி உயரத்திலிருந்து  அந்த வாலிபர் குதித்து தப்பிக்க முயன்றார், டவரின் அருகே இருந்த புதற்றின் மீது குதித்து எவ்வித பாதிப்பு என்று அதிர்ஷ்டவசமாக உயர் தப்பினார், புதருக்குள் இருந்த அந்த வாலிபரை மீட்ட இரும்பு பாதை காவல்துறையினர், விசாரணை மேற்கொண்டதில், அந்த வாலிபர் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராகுல் என்பதும் ( 27), மத்திய பிரதேசத்தில் இருந்து தனது குடும்ப உறுப்பினர்களிடம், கேரளாவில் பணியாற்றும் தனது நண்பருடன்  வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு, நான் பயணித்த ஈரோடு ரயில் நிலையத்தில், ரயிலில் இருந்து இறங்கியுள்ளார், நான் கொண்டு வந்த பணம் தீர்ந்து விட்டதாகவும், தனது நண்பரை தொடர்பு கொள்ள இயலாததாலும் செல்போன் பணம் திரும்பச் செல்வதற்கான பயண சீட்டு உள்ளிட்டகைகளை கேட்டு,  டவரின் மீது ஏறி தற்கொலை போராட்டத்தில் ஈடுபட போவதாக மிரட்டல் விடுத்ததாக அந்த வாலிபர் தெரிவித்துள்ளார், மேலும் இந்த வாலிபர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

டவரில் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்து வரும் வாலிபரை காண ரயில் பயணிகளும், பொதுமக்களும் திரண்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: