திங்கள், 27 நவம்பர், 2023

பெருந்துறையில் கல்லூரி அருகே குட்கா விற்பனை; 3 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்பதை கண்காணிக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் உத்தரவின் பேரில் மாவட்ட போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டம் பெருந்துறை வாய்க்கால்மேடு பகுதியில் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் ஆயிரக்கணக்கான மாணவ- மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த கல்லூரிகள் அமைந்துள்ள பகுதியின் அருகே தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் பெருந்துறை போலீசார் ரகசிய விசாரணை மேற்கொண்டனர். அப்போது வாய்க்கால்மேடு பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் சோதனை செய்த போது,  ரூ.2.30 லட்சம் மதிப்பிலான 37 கிலோ குட்கா பொருட்களை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து, குட்கா பொருட்களை விற்பனை செய்து வந்த பெருந்துறை பிச்சாண்டம்பாளையம் பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி மற்றும் ஈரோடு ரங்கம்பாளையம் பகுதியை சேர்ந்த எட்வர்டு மற்றும் அவரது அண்ணன் மகன் அருண்குமார் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பின்னர், அவர்களை பெருந்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்


শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: