ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் வழியாக கர்நாடகாவுக்கு செல்லக்கூடிய பிரதான சாலை உள்ளது. இதனால் இரு மாநில எல்லை பகுதியில் சோதனை சாவடி அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் வரட்டுப்பள்ளம் அணை அருகே வனத்துறை சோதனைச்சாவடியும், பர்கூர் அருகே ஒரு சோதனைச்சாவடியும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சோதனைச்சாவடி வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் கர்நாடகா மாநிலத்துக்கு சென்று வருகிறது. போலீசாரும் சோதனை சாவடிகளில் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் பர்கூர் சோதனை சாவடி வழியாக கேரளாவில் இருந்து தப்பிய மாவோயிஸ்டுகள் செல்ல வாய்ப்பு உள்ளதால் இந்த சோதனை சாவடியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டார். அதன்படி பர்கூர் சோதனை சாவடியில் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் தலைமையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக இரவு முழுவதும் சோதனையை தீவிரப்படுத்தி அந்த வழியாக வரும் வாகனங்களை சோதனை செய்து விசாரணை நடத்திய பிறகே அனுப்பி வைக்கிறார்கள்.
0 coment rios: