ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட ( 35 ) வது வார்டில் பார்வதி ராஜேந்திரன் என்பவர் நிரந்தர தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவருக்கு, அவ்வப்போது உடல்நிலை பாதிக்கப்படுவதால் இவருக்கு உதவியாக அவரது மகளாகிய தமிழரசி அவருடன் இணைந்து நான்கு சக்கர வாகனங்களில் வீட்டு குப்பைகளை தரம் பிரித்து சேகரிக்கும் பணியை செய்து வருகிறார்,
இந்நிலையில், ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட 35வது வார்டு சார்பாக வாட்ஸ் அப் குழு உருவாக்கி, அதில் பணி சார்ந்த தகவலை பதிவு செய்து வருகின்றனர், இக்குழுவில் அதிகாரிகள் மற்றும் வார்டில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் ஆண்கள் பெண்கள் என இருபாலரும் இணைக்கப்பட்ட உள்ளனர், இந்நிலையில் இந்த பொது தளத்தில் 35ஆவது வார்டு சுயஉதவி குழு தூய்மை பணி மேற்பார்வையாளராக பணிபுரிந்து வரும், மாதேஸ்வரன் மற்றும் சுய உதவி குழு வாகன பிரிவு மேற்பார்வையாளர் யுவராஜ் ஆகியோர் தமிழரசி மற்றும் அவருடன் சேர்ந்து பணி செய்யும் பெண்களை தகாத வார்த்தையால் பேசி பொதுத்தளத்தில் பதிவு செய்துள்ளார்,
இதனால் மாநகராட்சி ஆணையரிடம் இவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழரசி முறையிட்டுள்ளார்,
இதனை அறிந்த மேற்பார்வையாளர் மாதேஸ்வரன் ஆணையரிடம் கம்ப்ளைன்ட் செய்கிறாயா? என்று சொல்லியும் இவரை இழிவாக தரகுறைவாக பேசி கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால், மிகுந்த மனவேதனை அடைந்த தமிழரசி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஈரோடு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சாதிக் தலைமையில், சுமார் 15க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்களுடன், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் பரபரப்பு புகார் மனு அளித்தார்.
0 coment rios: