சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை மாதம் மாலை அணிந்து கோவிலுக்கு செல்வது வழக்கமாகும். இந்த நிலையில், சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல கால பூஜைகளுக்காக நேற்று முன்தினம் நடை திறக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் பவானி கூடுதுறை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஐயப்ப பக்தர்கள் இன்று கார்த்திகை ஒன்றாம் தேதியையொட்டி, அந்தந்த பகுதிகளில் உள்ள கோவில்களில் மாலை அணிந்து விரதத்தை துவங்கினர்.
ஐயப்பன் கோவில் செல்லும் சீசன் துவங்கியதால், பவானி கூடுதுறையில் இன்று அதிகாலை 3 மணியில் இருந்து ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. இதனால், கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. இதே போல, ஈரோடு கருங்கல்பாளையத்தில் உள்ள ஐயப்பா சேவா நிறுவனம் சார்பில், ஐயப்ப பக்தர்களுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஈரோடு மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மாலை அணிந்து கொண்டனர்.
0 coment rios: