செவ்வாய், 21 நவம்பர், 2023

ஈரோடு மாவட்ட திமுக மூத்த உறுப்பினர்களுக்கு பொற்கிழிகள் வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஈரோடு மாவட்டய், பெருந்துறை அருகே நடைபெற்று திமுக நிகழ்ச்சியின் போது 2500 மூத்த திமுக உறுப்பினர் மற்றும் நிர்வாகிகளுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழிகளை வழங்கி கௌரவித்தார்.

தமிழகம் முழுவதும் தி.மு.க.வில் உள்ள மூத்த உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகளை கௌரவப்படுத்தும் வகையில் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி மாவட்டந்தோறும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சருமான முத்துசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், திமுக மாநில இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டு துறை மற்றும் சிறப்பு திட்ட அமலாக்கம் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு, 2,580 கழக மூத்த நிர்வாகி மற்றும் உறுப்பினர்களுக்கு பொற்கிழிகளை வழங்கி கௌரவித்தார்.
அதனை தொடர்ந்து கொரோனா தொற்றினால் உயிரிழந்த திமுக உறுப்பினர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவிகளை வழங்கினார்.
முன்னதாக நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி,
 
எவ்வளவு மாவட்டம் சென்றாலும் ஈரோடு மாவட்டத்திற்கு வரும் போது பெரியார் பாசறைக்கு வருவது மகிழ்ச்சி அளிக்கின்றது. அமைச்சர் பொறுப்பேற்று கிழக்கு தொகுதியில் நடந்த போது இரண்டு நாள் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். நமது கூட்டணி வேட்பாளரை 68 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தீர்கள். தந்தை பெரியார் பிறந்து வளர்ந்தது ஈரோடு பெரியார் மண் என குறிப்பிடுவதற்கு ஈரோடு தான். 2600 பேர் கட்சிக்காக உழைத்தவர்களுக்கு பொற்கிளி வழங்கபட உள்ளன. நான் உங்களுடைய ஆசிகளை வாங்க வந்து உள்ளேன். மதுரையில் கடந்த 2 மாதத்திற்முன் புளி சோறு மாநாடு நடைபெற்றன. கடந்த 2.5 ஆண்டுகளில் தேர்தல் வாக்குறுதி முதல்வர் நிறேவேற்றி உள்ளார். தலைவர் போட்ட முதல் கையெழுத்து கட்டணம் இல்லா பேருந்து. முதல்வர் காலை உணவு திட்டம் இதை மற்ற மாநிலம் பின்பற்றி வருகின்றன. காலை உணவு திட்டத்தில் 17 லட்சம் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர். மகளிர் உரிமை திட்டத்தில் இதுவரை 1.17 கோடி பேர் பயன் பெற்று உள்ளனர்.
இந்தியா கூட்டணி வெற்றி பெற அனைவரும் பாடுபட வேண்டும்.
கட்சியின் உறுப்பினராக இளைஞர் அணி செயலாளராக சட்டமன்ற உறுப்பினராக ஈரோடு வந்துள்ளேன் ஆனால் அமைச்சராக  பொறுப்பேற்று முதல் சுற்றுப்பயணம் ஈரோட்டில் தான் வந்தேன்.

தமிழ்நாட்டை பெரியார் மண் என்று தான் அழைக்கிறோம் அந்த பெருமை ஈரோட்டிற்கு உள்ளது மகிழ்ச்சி அடைகிறேன். கொளத்தூரில் நடைபெற்ற பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி கலந்து கொண்டு வருகிறார் அவருக்கு வாழ்த்துக்கள் என தெரிவித்தார் தலைவன் தொண்டனுக்கு ஆசி செய்வதாக கூறினார்.
கலைஞர் அறக்கட்டளை மூலம் மாதம் 8 பேருக்கு மருத்துவம் கல்வி செலவுகள் என ஐந்து கோடியே 50 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அறக்கட்டளை மூலம் வழங்கியுள்ளோம்.
45 மாவட்டங்களில் 44 கோடியே 74 லட்சம் மதிப்பிலான பொற்கிழிகளைர வழங்கி உள்ளோம். ரத்தம் சிந்தியவர்கள், மூத்த முன்னோடிகள் எனவே தாத்தா பாட்டிக்கு பேரனாக இருந்து செய்கிறேன். உங்களுடைய ஆசியையும் வாழ்த்தையும் பெற வந்துள்ளேன்.

டிசம்பர் 17ம் தேதி சேலத்தில் இளைஞரணி இரண்டாவது மாநாடு நடைபெற உள்ளது அனைவரும் மாநாடு சிறப்பாக நடைபெற வாழ்த்த வேண்டும். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 14 லட்சம் பேர் பயனடைந்து வருகின்றனர். பொதுமக்கள் இடத்தில் எடுத்துச் செல்ல வேண்டும். வரும் 2024ம் ஆண்டு தேர்தலில் எஜமானர்கள் ஆட்சியையும், அடிமைகளின் ஓனர் ஆட்சியையும் வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க வேண்டும். பொற்கிழியில் பத்தாயிரம் ரூபாய் வழங்குவதை விட உங்கள் தோளில் போட்டிருக்கும் கருப்பு சிவப்பு துண்டு தான் பெருமை என கருதுவீர்கள்.

நீங்கள் இல்லை என்றால் கலைஞரும் இல்லை, திமுகவும் இல்லை தற்போதைய முதலமைச்சர் ஆட்சியில் இருப்பதற்கும் நீங்கள் தான் காரணம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவை தான் நேரில் பார்த்ததில்லை. ஆனால் இங்குள்ள மூத்த முன்னோடிகள் பார்த்திருக்கிறீர்கள் அவரது பேச்சுகளை கேட்டு இருக்கிறீர்கள் உங்களை அவர்களின் மறு உருவமாகவே பார்க்கிறேன். உங்களது பாதத்தை தொட்டு வணங்குகிறேன் என்றார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: