ஈரோடு வில்லரசம்பட்டி நால்ரோட்டில் இருந்து கனிராவுத்தர் குளம் செல்லும் சாலையில் எஸ்.எம்.வி.பி. பள்ளி அருகே சண்முக சுந்தரம், 50. வீடு உள்ளது. இவர் பில்டிங் கான்டிராக்டர். புதிதாக வீடு கட்டி குடிபுகுந்துள்ளார். இவருடன் மனைவி, ஒரு மகன், ஒரு மகள் இந்த வீட்டில் வசிக்கின்றனர்.
வீட்டில் பெயிண்டிங் வேலை நடக்கிறது. கீழ் தளம், முதல் தளத்தையும் சண்முக சுந்தரம் குடும்பத்தினரே பயன்படுத்தி வந்தனர். கடந்த 18ல் குடும்பத்துடன் வீட்டின் முன்புற கதவை பூட்டி விட்டு கோவைக்கு சென்றனர். கடந்த 19 இரவு வீட்டுக்கு வந்தனர்.
வீட்டின் அலமாரி லாக்கரில் வைத்திருந்த ரூ.3 லட்சம் ரொக்கம், 10 பவுன் தங்க நகை மாயமாகி இருந்ததை பார்த்து சண்முக சுந்தரம் அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.
0 coment rios: