பி.எஸ்.என்.எல். ஊழியர்கள், ஓய்வூதியர்கள், ஒப்பந்த ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஈரோடு டெலிபோன் பவன் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்துக்கு தேசிய தொலைதொடர்பு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் செங்கோட்டையன் தலைமை தாங்கினார்.
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எஸ்.பாலு முன்னிலை வகித்தார். இதில் பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் சார்பில் 4ஜி, 5ஜி இணைப்பு வழங்க வேண்டும். ஊழியர்களின் பற்றாக்குறை பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். ஒப்பந்த ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளத்தை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இந்த போராட்டத்தில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
0 coment rios: