அதன்படி, மாவட்டத்தில் ஈரோடு-1 பணிமனையில் 24, ஈரோடு-3 பணிமனையில் 21, பவானி பணிமனையில் 40, பெருந்துறை பணிமனையில் 36, கொடுமுடி பணிமனையில் 15, அந்தியூர் பணிமனையில் 21, கோபி பணிமனையில் 37, சத்தி பணிமனையில் 25, கவுந்தப்பாடி பணிமனையில் 39, நம்பியூர் பணிமனையில் 45, தாளவாடி பணிமனையில் 1 நகரப் பேருந்தும் நகரப் பேருந்துகளும், என மொத்தம் 304 அரசு நகரப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதில், பணிபுரியும் மகளிர் மற்றும் உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண அரசு பேருந்துகளில் கட்டணமில்லா பயண வசதி திட்டத்தின் கீழ் கடந்த ஜூலை 2021 முதல் அக்டோபர் 2023 வரை 4 கோடியே 67 லட்சத்து 67 ஆயிரத்து 692 மகளிர் பயணம் செய்துள்ளனர்.
0 coment rios: