ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்த பர்கூர் மலைப்பகுதியில் கொங்காடை மலைக்கிராமம் அமைந்துள்ளது. இக்கிராமத்தில், கடந்த 2 மாதமாக கரடிகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. சமீபத்தில், அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த கரடி சமையல் பொருட்களை எடுத்து சாப்பிட்டு விட்டு மீீதம் இருந்த உணவு பொருட்களை கொட்டி சேதம் செய்து விட்டு சென்றது.
இந்த நிலையில், வியாழக்கிழமை (நேற்று) இரவு கொங்காடையில் மளிகை கடை வைத்து நடத்தி வரும் ஜாவராயன் என்பவரது கடையை உடைத்து சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள மளிகை பொருட்களை சாப்பிட்டும், மளிகை பொருள்களை உடைத்தும் சேதப்படுத்தியது. மேலும், அப்பகுதியில் வசிக்கும் மாதவதப்பிடி என்பவரது வீட்டில் கதவை உடைத்து வீட்டு சமையல் பொருட்களை சூறையாடி விட்டு சென்றது.
கொங்காடையில் நாளுக்கு நாள் கரடியின் தாக்குதல் அதிகரித்து வருவதால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பீதியடைந்துள்ளனர். அதனால் அவர்கள், வனத்துறையினர் கரடியின் நடமாட்டத்தை கண்காணித்து கரடியை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்டிவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
0 coment rios: