இதை நம்பி முன்னாள் ராணுவத்தினர் நூற்றுக்கணக்கானோர் சேர்ந்தனர். இரண்டு ஆண்டாக பணம் தராததால், முதலீடு செய்தவர்கள் பணத்தை திரும்பக் கேட்டு, ஈரோடு ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜவகர் அறிவுரையின்படி, ஈரோடு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் முதலீட்டாளர்களின் புகார்களின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இதில், 22 பேர் மட்டுமே ரூ.30 கோடி அளவுக்கு முதலீடு செய்து பணம் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தது தெரியவந்தது. இந்நிலையில், இந்த வழக்கு தற்போது ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம் செய்யப்பட்டது.
அதன் பெயரில் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தனியார் நிறுவனத்தின் இயக்குனரான நவீன்குமார் என்பவரை தேடி வந்தனர். அவர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இந்த நிலையில், நவீன்குமார் வெளிநாடுகளுக்கு தப்பி செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்திருப்பதாக ஈரோடு குற்றப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில், சென்னை விமான நிலையத்திற்கு விரைந்து சென்ற குற்றப்பிரிவு போலீசார் நவீன்குமாரை கைது செய்தனர். பின்னர், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
0 coment rios: