புதன், 29 நவம்பர், 2023

சாலை வரி உயா்வை ரத்து செய்யக் கோரி ஈரோட்டில் ஆா்ப்பாட்டம்

நவம்பர் 7ஆம் தேதி வெளியிட்ட சாலை வரி ரத்து செய்ய வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோடு வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ சார்பில், சாலை போக்குவரத்து சங்க தலைவர் தனபால் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில்,
பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டுள்ள சுற்றுலா வாகன ஓட்டுநர்கள், வேன் ஓட்டுநர்கள், சரக்கு வாகன ஓட்டுநர்கள், லாரி, பஸ் உள்ளிட்ட அனைத்து வகையான வாகனங்களுக்கும் கடுமையான வரி உயர்வு செலுத்தும் வகையில் உள்ளது, பெரும்பாலும் நாங்கள் அனைவரும் வங்கிகளில் கடன் பெற்றும், அரசு அல்லது தனியார் நிதி நிறுவனங்களில் கடன் பெற்றுத்தான் வாகனங்களை வாங்கி உள்ளோம்.

பெட்ரோல், டீசல், இன்சூரன்ஸ் பிரிமியம், டோல்கேட் கட்டணம், டயர், ஸ்பேர்பார்ட்ஸ் விலை உயர்வு போன்றவைகளால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு தான் தொழில் செய்து வருகின்றோம், ஆனாலும் பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் எங்களால் ஆன சிறப்பான சேவையை வழங்கியும் வருகின்றோம், எங்கள் குடும்பங்கள் மிகவும் சிரமத்திற்கு உட்பட்டு தான் வாழ்ந்து வருகின்றோம். நிலைமை இவ்வாறு இருக்க மேலே குறிப்பிட்ட கட்டண உயர்வு என்பது எங்களால் தாங்க இயலாத மாபெரும் சுமையாகும் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகின்றோம்.

எனவே பல லட்சம் மோட்டார் வாகன தொழிலாளர்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் பாதுகாக்கும் பொருட்டு தாங்கள் நடவடிக்கை எடுத்து இந்த கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும் என்பன கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் தோஷங்களை எழுப்பினார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: