புதன், 29 நவம்பர், 2023

காட்சி பொருளாக மாறிய கனி மார்க்கெட் வணிக வளாகம்; ஈரோடு மாநகராட்சி கூட்டத்தில் குற்றச்சாட்டு



ஈரோடு மாநகராட்சி மாமன்ற சாதாரண மற்றும் அவசர கூட்டம் மாநகர மேயர் நாகரத்தினம் தலைமையில் இன்று நடைபெற்றது. துணை மேயர் செல்வராஜ், ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில், சின்ன சேமூர் அரசுப்பள்ளியில் பழுதடைந்த நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டி, சத்துணவு கூடத்தை பாதுகாப்பான முறையில் இடித்து அப்புறப்படுத்துதல், சுகாதார பணியாளர்கள் பற்றிய விரிவான கண்கெடுப்பு பணிக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.1 லட்சம் நிதி ஒதுக்க அனுமதி, திடக்கழிவு மேலாண்மை, குடிநீர் விநியோகம், சாலை பழுது, தெருவிளக்கு தொடர்பான புகார்களை பதிவு செய்து , அதனை உடனடியாக சரி செய்யும் வகையில் குறை தீர்க்கும் மையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. இம்மையத்தை சமுதாய பொறுப்பு நிதி மூலமாகவோ அல்லது மாநகராட்சி பொது நிதி மூலமாகவோ ஆண்டிற்கு ரூ.15 லட்சம் மதிப்பில் ஏற்படுத்தி இயக்குவதற்கு அனுமதி உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

இதனையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்து பேசினர். தற்போது மண்டல கூட்டங்களை நடத்துவது போன்று, நிலைக்குழு கூட்டத்தையும் நடத்த வேண்டும், ராஜாஜி தெருவில் புதிய சாலை அமைக்க வேண்டும், ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்தில் முறையாக குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதாள சாக்கடை குழாய் போடப்பட்டுள்ள பல்வேறு இடங்களில் மூடி இல்லாமல் இருக்கிறது. அந்த இடங்களில் மூடி போடுவதோடு, சேதமடைந்த மூடிகளுக்கு பதிலாக புதிய மூடிகளை போட வேண்டும், துப்புரவு பணியாளர்களின் பற்றாக்குறையை சரி செய்ய வேண்டும், கொல்லம்பாளையத்தில் பழுதடைந்த நூலகத்தை இடித்து விட்டு, புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என கோரினர்.

மேலும், இக்கூட்டத்தில் கலந்து கொண்ட மாமன்ற உறுப்பினர் ஆதி ஸ்ரீதர் கூறும்போது தனது வார்டில் அரசின் திட்டமான நடப்போம் நலம் பெறுவோம் என்ற திட்ட பணிகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு அமைச்சர் துவக்கி வைத்தார். ஆனால் துவக்கி வைத்த அடுத்த இரு தினங்களுக்குள் மீண்டும் சாலைகள் ஆக்கிரமிக்கப்பட்டு சந்தைகள் அப்பகுதியில் கூடியுள்ளது. இந்த நிலையில்  மாநகராட்சி நிர்வாகம் அரசின் திட்டத்திற்கு அவ்வப்போது மட்டுமே சாலைகளை சீரமைத்து அரசு விழாவை நடத்தி விட்டு மற்ற நாட்களில் சாலையை வெறுமனே விட்டு விடுவதாக குற்றசாட்டாக தெரிவித்தார், மேலும் கனி மார்க்கெட் பகுதியில 51 கோடி திட்ட மதிப்பிட்டில் கட்டப்பட்டுள்ள கனி மார்க்கெட் வளாகம் 2 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இதுவரை வளாகம் திறக்கப்படாத நிலையில், தற்போது சென்னை ரிப்பன் மாளிகை போல் காட்சி பொருளாக காட்சியளிப்பதாக மாமன்ற உறுப்பினர் பழனியப்பா செந்தில்குமார் தெரிவித்தார்.

இதற்கு பதிலளித்த ஆணையர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகராட்சியில் சாலைகள் பழுதடைந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, அடுத்த 3 மாதங்களில் அனைத்து சாலைகளும் போடப்படும், ஊராட்சிக்கோட்டை கூட்டு குடிநீர் திட்டத்தில் புதியதாக இணைப்புகள் வழங்கப்பட்டு வரப்படுகிறது. அப்பகுதியில் விரைவில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என தெரிவித்தார்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: