சென்னையில் இருந்து மங்களூர் செல்லும் விரைவு ரயிலில் முன் பதிவு பெட்டியில் கேரளாவை சேர்ந்த பெண் பயணி ஒருவர் பயணம் செய்து உள்ளார்.
ரயில் இன்று அதிகாலை சேலத்தில் இருந்து ஈரோடு நோக்கி வந்த போது முன் பதிவு பெட்டியில் இருந்த பெண் பயணியிடம், வேலூர் மாவட்டத்தை சேர்ந்த கருணாகரன் கட்டிட தொழிலாளி என்பவர் சில்மிஷத்தில் ஈடுபட்டு, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் பயணி நடந்த சம்பவம் குறித்து டிக்கெட் பரிசோதகர் மூலம் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர், புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஈரோடு ரயில்வே காவல்துறையினர் கட்ட தொழிலாளியான கருணாகரனை கைது செய்து ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
0 coment rios: