ஈரோடு மாவட்டத்தில், தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்யும் வணிகர்கள் மீது, கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் எச்சரித்துள்ளார். அதன்படி, மாவட்டத்தில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது, போலீசார் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். .
இந்நிலையில், சித்தோடு அருகே உள்ள சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையொட்டி உள்ள சத்தியமங்கலம் செல்லும் மேம்பாலம் அருகே வாகன தணிக்கையில் சித்தோடு போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக ஈரோட்டில் இருந்து சத்தியமங்கலம் நோக்கி சென்ற கார் ஒன்றை சந்தேகத்துக்கு இடமான வகையில் நிறுத்தி சோதனை செய்தனர்.
சோதனையில், காரில் தடை செய்யப்பட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான 130 கிலோ குட்கா பொருட்கள் கொண்டு செல்லப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், குட்கா பொருட்களை கொண்டு சென்ற ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த தண்டபாணி (வயது 40) என்பவரை கைது செய்தனர். மேலும், கடத்தலுக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.
0 coment rios: