தனியார் பொறியியல் கல்லூரி பேருந்து கவிழ்ந்து 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் காயம் - பெருந்துறை போலீசார் விசாரணை
ஈரோடு மாவட்டம், பெருந்துறைய அடுத்துள்ள துடுப்பதியில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் பேருந்து தினமும், திருப்பூரில் இருந்து மாணவ, மாணவிகளை அழைத்து வருவது வழக்கம். அதன்படி, வழக்கம்போல இன்று காலை மாணவ, மாணவிகளை ஏற்றிக் கொண்டு வந்த பேருந்து, பெருந்துறையை அடுத்துள்ள கிரே நகர், மேட்டுப்புதூர் வளைவில் வேகமாக வந்து திரும்பியபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
அதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக மாணவ, மாணவிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதில், 5 பேருக்கு பலமான காயமும், 17 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டிருப்பதாக ஆம்புலன்ஸ் மருத்துவக் குழுவினர் தெரிவித்தனர். காயமடைந்த மாணவ, மாணவிகளுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
0 coment rios: