ஆண்களும் குடும்ப நலத்தில் பங்கேற்கும் பொருட்டு ஆண்களுக்கான நவீன குடும்ப நல அறுவை சிகிச்சை முகாம்கள் நடத்த அரசால் இரு வார விழிப்புணர்வு விழா ஆண்டுதோறும் அனுசரிக்கப்படுகிறது.
அதன்படி, ஈரோடு மாவட்ட குடும்ப நலச் செயலகம் சார்பில், ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் அறிவுறுத்தலின் பேரில், விழிப்புணர்வு ரதத்தின் தொடக்க விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை (இன்று) நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட துணை இயக்குநா் (குடும்ப நலம்) செந்தில்குமார் (பொ) தலைமை வகித்தாா். இணை இயக்குநர் (நலப்பணிகள்) (பொ) மரு.பிரேமகுமாரி, துணை இயக்குநர்கள் மரு.சோமசுந்தரம் (சுகாதாரப் பணிகள்), மாநகர நல அலுவலர் மரு.பிரகாஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட ஆட்சியா் ராஜ கோபால் சுன்கரா சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு விழிப்புணா்வு ரதத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தாா். பின்னர், விளக்க கையேட்டினை வெளியிட்டு, அமைக்கப்பட்டிருந்த விழிப்புணர்வு கருத்துக்காட்சி அரங்கினை திறந்து வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில், அனைத்து வட்டார சுகாதார புள்ளியாளா்கள், அரசு அலுவலகப் பணியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.
0 coment rios: