தந்தை பெரியார் வீடு உட்பட ஈரோடு பகுதியில் ஏராளமான வீடுகளுக்கு பட்டா கிடைக்கவில்லை என தெரிவித்திருந்தனர், ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக இதை அறிவித்திருந்தோம், அதன்படி அவர் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார், அந்த உத்தரவு விரைவில் செயல்பட்டுக்கு வரும் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுக்கணக்குக் குழு தலைவரும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான செல்வத்தெருந்தகை பேட்டி.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை
பொதுக்கணக்குக் குழு
தலைவரும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினருமான செல்வத்தெருந்தகை மற்றும் பொதுக்கணக்குக் குழு உறுப்பினர்கள், ஈரோடு புதிதாக தூங்கப்பட உள்ள சோலார் பேருந்து நிலையம் உள்ளிட்ட மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டப்பேரவை பொது கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை செய்தியாளர்களிடம் கூறுகையில்...
ஈரோட்டில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட வந்துள்ள புது கணக்கு குழுவினர் இன்று காலை காரைவாய்க்கால் பகுதியில் ஒரு பாலம் மற்றும் சாலை அமைக்கப்படாத பகுதிகளை பார்வையிட்டோம், எங்களோடு எம்எல்ஏ இளங்கோவன் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா மாநகராட்சி ஆணையர் சிவ கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் பார்வையிட்டனர், வரும் டிசம்பர் மாதத்துக்குள் அப்பணிகளை முடித்து தருவதாக கலெக்டர் உறுதி அளித்துள்ளார்,
ஈரோடு மாவட்டம், சோலாரில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பஸ் ஸ்டாண்ட் பணிகளை ஆய்வு செய்துள்ளோம் இங்கு 68 கோடி ரூபாயில் பஸ் ஸ்டாண்ட் வாகன நிறுத்தம் லாரி உள்ளிட்ட பெரிய வாகனங்கள் நிறுத்துவதற்கான இடம் மற்றும் பணிமனை போன்றவை அமையும் பணி விரைவாக கடந்து வருகிறது, இப்ப நிகழ்ச்சி விரைவாக முடிக்கப்பட்டு வரும் 2024 பிப்ரவரி மாதம் திறப்பு விழா நடத்தப்பட முடிவு செய்யப்பட்டு கட்டப்பட்டு வருகிறது, வரும் பார்லிமென்ட் தேர்தல் அறிவிப்புக்கு முன்பாகவே இந்த பஸ் ஸ்டாண்டை திறக்க முடிவு செய்துள்ளோம்,
மேலும், பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம் தேசிய அளவில் செயல்படுத்தப்படுகிறது, இத்திட்டத்தில் மதுரை உட்பட பல இடங்களில் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளுக்கு தண்ணீர் மின் இணைப்பு வடிகால் வசதி போன்றவை செய்து கொடுக்கப்படாமல் இருப்பதை கண்டறிந்தோம் மதுரையில் அப்படியே செய்யாத வட்டார வளர்ச்சி அலுவலர் சஸ்பெண்ட் செய்தேன் அன்று இரவே குடியிருப்புகளுக்கு குடிநீர் மின் இணைப்பு வசதிகள் வழங்கப்பட்டுள்ளது,
அதுபோல், ஈரோட்டில் வெள்ள கவுண்டன் பாளையம் கட்டப்பட்டுள்ள வீடுகள் இன்னும் திறக்கப்படவில்லை என தெரிவித்தார்கள் வீடுகளை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் தேசிய அளவில் உரிய பயனாளிகள் தேர்வு செய்யப்படாமல் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளில் சிலர் இறந்ததால் அவர்கள் பெயர் நீக்கப்படாமல் புதிய பயனாளிகள் பட்டியல் தயாரிக்கப்படாமலும் சில குறைபாடுகள் உள்ளது அதை சரி செய்து விரைவில் வழங்குவோம், இத்திட்டத்தில் மாநில அரசு 62 சதவீதமும் மத்திய அரசு 32 சதவீதமும் மட்டுமே வழங்குகின்றது, இதை மக்கள் அறியும்படி அறிவிப்பு பலகை வைக்க அறிவுறுத்தியுள்ளோம்,
ஈரோடு பெருந்துறை சிப்காட்டில் சில பிரச்சனைகள் உள்ளதாக அறிந்தோம், அங்கு ஆய்வு செய்து சட்டப்பேரவைக்கு உரிய பரிந்துரைகளை வழங்குவோம், ஏற்கனவே அமைச்சர் உதயநிதி ஓரிருநாளில் ஆய்வு செய்து சிப்காட்டில் சில அறிவிப்புகளை வெளியிட உள்ளார், அதேபோல் ஈரோடு பகுதியில், பெரியார் வீடு உட்பட ஏராளமான வீடுகளுக்கு பட்டா கிடைக்கவில்லை என தெரிவித்திருந்தனர் கடந்த 2021 சட்டசபை தேர்தலின் போது தேர்தல் வாக்குறுதியாக இதை அறிவித்திருந்தோம், அதன்படி அவர் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார் அந்த உத்தரவு விரைவில் செயல்பட்டுக்கு வரும் என தெரிவித்தார்.
0 coment rios: