கலைஞர் மகளிர் உரிமைத் துறை கேட்டு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில் ஈரோடு மற்றும் கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஈரோடு வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட உதவி தலைவர் ப.மாரிமுத்து தலைமை வகித்தார். நகரச் செயலாளர் செந்தில், மாவட்ட குழு உறுப்பினர் ரேணுகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. கோபிசெட்டிபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்னே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் பி.சாவித்திரி தலைமை வைத்தார். மாவட்டச் செயலாளர் ஏ.சகாதேவன் சிறப்புரை ஆற்றினார். மாவட்ட உதவி செயலாளர்கள் அன்னக்கொடி, ரமேஷ், நாசீர் பேக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது.
0 coment rios: