ஈரோடு மாவட்டம், பவானிசாகர் பகுதியில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் மீன் குஞ்சுகளின் வளத்தினை பெருக்கிடும் நோக்கத்தோடு ஆறுகளில் நன்னீர் மீன் குஞ்சுகள் இருப்பு செய்தல் திட்டத்தினை, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை ஆணையர் பழனிசாமி மற்றும் மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா ஆகியோர் முன்னிலையில், மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர் தெரிவித்ததாவது:-
சத்தியமங்கலம், வட்டம், அண்ணாநகர், பவானி ஆற்றுப்படுகையில் சுமார் இரண்டு இலட்சம் மீன்விரலிகளை ஆறுகளில் இருப்பு செய்திடும் வகையிலும், நன்கு வளர்ந்த நாட்டின மீன்குஞ்சு விரலிகளான கட்லா, ரோகு, மிர்கால், கல்பாசு மற்றும் சேல்கெண்டை ஆகியவற்றை இருப்பு செய்யும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏறத்தாள சுமார் 40 லட்சம் மீன்குஞ்சுகளை ஆறுகளில் விடுவதற்காக மீன்வளத்துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
0 coment rios: