தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் சுமார் ரூ.15 லட்சம் மதிப்புள்ள உணவு பொருட்கள் இரண்டு லாரிகளில் ஈரோடு மாவட்ட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் சார்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அரிசி பருப்பு, கோதுமை மாவு, ரவை, கடலை எண்ணெய், பாசிப்பருப்பு, சோப்பு, பெட் சீட்டுகள், பிளாஸ்டிக் பாய்கள், பேண்ட், சர்ட், சேலை, நைட்டி மற்றும் மருந்து பொருள் ஈரோடு மாவட்டம் முழுவதும் உள்ள வணிகர் பேரமைப்பின், இணைப்புச் சங்கத்தின் மூலம் சேகரிக்கப்பட்டு, ஈரோடு மாவட்ட தலைமை அலுவலகத்தில் பேக்கிங் செய்யப்பட்டு தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டத்திற்கு இரண்டு லாரிகள் மூலம் 12 டன் அளவில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் இராமச்சந்திரன், மாவட்ட பொருளாளர் உதயம் செல்வம், மாவட்ட இளைஞரணி தலைவர் ராஜா, செயலாளர் லாரன்ஸ் ரமேஷ், ஈரோடு மாநகர தலைவர் அந்தோணி யூஜின், செயலாளர் பாலமுருகன், மாநகர பொருளாளர் சாதிக்பாட்சா மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி பொறுப்பாளர்கள் பாலகிருஷ்ணன், தமிழரசன் ஆகியோர் பங்கேற்றனர்.
0 coment rios: