நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள முத்துக்காளிப்பட்டி முனியப்பன் கோவில் காட்டை சேர்ந்த செந்தில்குமார் மகன் சைலேஷ்வர் (வயது 23). கார் டிரைவர். இவர் அதே பகுதியைச் சேர்ந்த மச்சேந்திரன் (வயது 25), ராகுல் (வயது 23) ஆகியோருடன் சேலத்தில் கோவை நோக்கி காரில் சென்றனர். காரை சைலேஷ்வர் ஓட்டினார்.
இந்த நிலையில், நேற்று இரவு சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறையை அடுத்த ஓலப்பாளையம் பிரிவு அருகே சென்றபோது எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து ஓடிய கார் மடத்துப்பாளையம் பிரிவு தடுப்புச்சுவரில் மோதி, எதிர்ப்புற சாலையில் தாறுமாறாக ஓடி அந்த வழியாக கோவையில் இருந்து சேலம் நோக்கி வந்த சரக்கு வாகனத்தின் மீது மோதியது.
இதில், டிரைவர் சைலேஷ்வர் படுகாயம் அடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, காரில் இருந்த மச்சேந்திரன், ராகுல் மற்றும் சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவரான ஈரோடு ஆர்.என்.புதூரைச் சேர்ந்த சிவா (வயது 40) ஆகிய 3 பேரும் படுகாயமடைந்த நிலையில் பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து பெருந்துறை போலீசார் விசாரிக்கின்றனர்.
0 coment rios: