வெள்ளி, 22 டிசம்பர், 2023

ஈரோடு மாநகராட்சி 2வது மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்

ஈரோடு மாநகராட்சி நிர்வாகம் தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கி வந்த ஊதியம் நாளொன்றுக்கு ரூ.707ஐ, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நாளொன்றுக்கு ரூ.687 ஆக சட்ட விரோதமாக குறைத்துள்ளதைக் கண்டித்தும், நகராட்சி நிர்வாக இயக்குநரின் அறிவுறுத்தலின் படியும், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் படியும், 1948ம் ஆண்டின் குறைந்தபட்ச ஊதியச் சட்டத்தின்படி நிர்ணயிக்கப்பட்ட, அரசாணை 62ன் படி குறைந்தபட்ச ஊதியமான நாளொன்றுக்கு ரூ.725 என்பதை முன் தேதியிட்டு வழங்க வேண்டும்.

தூய்மைப் பணிகளை தனியாருக்கு விடும் ஒப்பந்தங்கள் அனைத்தையும் ரத்து செய்ய வேண்டும். 480 நாட்கள் பணியாற்றிய தொழிலாளர்கள் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஓய்வு மற்றும் இறப்பு காலங்களில் பணப்பலன்களை தாமதமின்றி வழங்க வேண்டும், மாநகராட்சி பெயர் பொறித்த 3 ஜோடி சீருடைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி வரும் 29ம் தேதி முதல் வேலைநிறுத்தம் நடைபெறும் என அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் அறிவிக்கப்பட்டது.

இந்த வேலை நிறுத்தத்துக்கு முன் தயாரிப்பாக, மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் முன்பு தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதென்று முடிவு செய்யப்பட்டது. கடந்த 19ம் தேதி முதல் தினமும் காலையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, இன்று காலை பெரிய சேமூரில் உள்ள மாநகராட்சி 2வது மண்டல அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு சிஐடியு நிர்வாகி சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். உள்ளாட்சித்துறை பணியாளர் சங்க செயலாளர் மணியன் முன்னிலை வகித்தார். ஏஐடியுசி மாவட்ட தலைவர் சின்னசாமி, சிஐடியு மாவட்ட தலைவர் சுப்ரமணியன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதில், திரளான தினக்கூலி தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

শেয়ার করুন

Author:

We are an Online news portal that aims to keep the citizen in touch with the happenings in his/her own locality.

0 coment rios: