இந்த நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள தாளவாடி மலைப்பகுதியில் உள்ள முதியனூரைச் சேர்ந்த விவசாயி ராமு (வயது 32). இவர் தனது நிலத்தில் ராகி பயிரை பயிரிட்டிருந்தார். தற்போது அறுவடை காலம் என்பதால் நேற்று இரவு அவர் வயலில் காவலுக்கு இருந்தார்.
இன்று அதிகாலை திடீரென காட்டுக்குள் இருந்து வந்த யானையொன்று பயிர்களை மிதித்து சேதப்படுத்தியுள்ளது. இதனை கண்ட ராமு யானையை சத்தம் போட்டு விரட்ட முயன்றுள்ளார். அப்போது யானை அவரை துரத்த தொடங்கியது. இதில் அலறி அடித்து ஓடிய அவரை யானை தனது தும்பிக்கையால் தூக்கி போட்டு மிதித்தது.
இதனால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த தாளவாடி வனத்துறையினர் மற்றும் ஆசனூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், உடனடியாக நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இறந்த விவசாயின் உடலை எடுக்க விடாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
0 coment rios: