உலகில் ஆண்டுதோறும் 54 லட்சம் பேர் பாம்புக்கடியால் பாதிக்கப்படுகின்றனர் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவிக்கிறது. இதில் 1 லட்சத்து 38 ஆயிரம் பேர் வரை பாம்புக்கடியால் உயிரிழப்புக்கு ஆளாகின்றனர். இந்தியாவில் ஆண்டுக்கு 58 ஆயிரம் பேர் வரை உயிரிழப்பை சந்திக்கின்றனர். இந்திய அளவில் பாம்புக்கடியால் அதிக உயிரிழப்பு நேரிடும் மாநிலங்களில் தமிழகமும் இருந்து வருகிறது.
இந்த நிலையில், பாம்பு கடியில் இருந்து மனிதர்கள் தங்களை தற்காத்து கொள்வது தொடர்பாகவும், முதலுதவி அளித்தல் மற்றும் மருத்துவ சிகிச்சைகள் தொடர்பான மூட நம்பிக்கைகளை களையவும், ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டர் சார்பாக, பாம்பு கடியால் பாதிக்கப்பட்டவர்கள் இணைந்து பாம்புகளிடம் இருந்து தங்களை தற்காத்து கொள்வது தொடர்பான விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
ஈரோடு மணியன் மெடிக்கல் சென்டரில் துவங்கிய சைக்கிள் பேரணி வில்லரசம்பட்டி வழியாக மாவட்ட வன அலுவலகத்தில் நிறைவடைந்தது. பேரணியில், சைக்கிளில் பாம்புக்கடி தொடர்பான விழிப்புணர்வு வாசகம் அடங்கிய பதாகைகளை ஏந்திய படி பாம்புகடியால் பாதிக்கபட்டு குணமடைந்தவர்களும், ஈரோடு சைக்கிள் அஸ்ஸோசியேஷன் மாணவர்களும் பங்கேற்றனர்.
0 coment rios: