ஈரோடு கருங்கல்பாளையம் சின்ன மாரியம்மன் கோவில் வீதி டிவைன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மறைந்த முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயின் பிறந்தநாளையொட்டி, ஈரோடு தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மற்றும் அரசன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் ஞாயிற்றுக்கிழமை (இன்று) நடைபெற்றது.
முகாமினை, மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் சரஸ்வதி கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி துவங்கி வைத்தார். முகாமில், கண் பராமரிப்பு மற்றும் கண் பரிசோதனையின் முக்கியத்துவம் பற்றி அரசன் கண் மருத்துவமனை மருத்துவா் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தாா். முகாமில், 25க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். பல நோயாளிகளுக்கு மருந்து மாத்திரைகளும் வழங்கப்பட்டது.
இதில், பா.ஜ.க. நிர்வாகிகள், அரசன் கண் மருத்துவமனை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
0 coment rios: