பட்டைய கணக்காளர் மற்றும் வருமான வரி துறை சார்பில் கலந்துரையாடல் கூட்டம் ஈரோட்டில் உள்ள சங்க கட்டிடத்தில் நடந்தது. பட்டய கணக்காளர் சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் செயலாளர் பூபதி வரவேற்றார்.
இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினர்களாக தலைமை வருமானவரித்துறை கமிஷனர் சனதன ராமச்சந்திரன், முதன்மை கமிஷனர் ரங்கராஜ், இணை கமிஷனர் ஸ்ரீனிவாசா கண்ணா ஆகியோர் கலந்து கொண்டு வருமான வரி செலுத்துவது தொடர்பான ஆலோசனைகளை வழங்கினர்.
தொடர்ந்து வருமான வரி செலுத்துவோர் கேட்ட சந்தேகங்களுக்கு பதில் அளித்து விளக்கம் அளித்து பேசினர் .பட்டயக் கணக்காளர் சங்க செயலாளர் அருண், பொருளாளர் விஜயகுமார், கமிட்டி உறுப்பினர் பிரதீப், மூத்த பட்டய கணக்காளர்கள் மற்றும் வருமான வரி செலுத்தும் வணிகர்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டனர்.
0 coment rios: